Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
General Tamil

மரபுப் பிழையை நீக்குதல்

பறவைகள் ஆந்தை – அலறும் கோழி – கொக்கரிக்கும் குயில் – கூவும் காகம் – கரையும் கிளி – கொஞ்சும் மயில் – அகவும் கோட்டான் – குழலும் வாத்து – கத்தும் வானம்பாடி – பாடும் குருவி – கீச்சிடும் வண்டு – முரலும் சேவல் – கூவும் கூகை – குழலும் புறா – குனுகும் விலங்குகள் நாய் – குரைக்கும் நரி – ஊளையிடும் குதிரை கனைக்கும் கழுதை – கத்தும் பன்றி – உறுமும் சிங்கம் – முழங்கும் பசு – கதறும் எருது – எக்காளமிடும் எலி – கீச்சிடும் தவளை – கத்தும் குரங்கு – அலம்பும் பாம்பு – சீறிடும் யானை – பிளிரும் பல்லி – சொல்லும்

General Tamil

பறவை மற்றும் விலங்குகளின் இளமைப் பருவம்

புலிப்பரள் சிங்கக்குருளை பூனைக்குட்டி எலிக்குஞ்சு நாளிணிக்குட்டி கோழிக்குஞ்சு குதிரைக்குட்டி கீரப்பிள்ளை கழுதைக்குட்டி மான்கன்று ஆட்டுக்குட்டி யானைக்கன்று பன்றிக்குட்டி

General Tamil

தாவரங்களின் உறுப்புப் பெயர்கள்

சோளத்தட்டு முருங்கைக்கீரை தாழைமடல் தென்னங்கீற்று வாழையிலை பனையோலை வேப்பந்தழை மாவிலை மூங்கில் இலை நெல்தாள் செடி,கொடி மரங்களின் தொகுப்பு பூந்தோட்டம் மாந்தோப்பு வாழைத்தோட்டம் தேயிலைத் தோட்டம் சோளக்கொல்லை சவுக்குத்தோப்பு தென்னந்தோப்பு பனங்காடு வேலங்காடு பொருட்களின் தொகுப்பு பெயர்கள் ஆடு – மந்தை மாடு – மந்தை எறும்பு – சாரை கல் – குவியல் சாவி – கொத்து திராட்சை – குலை பசு – நிரை யானை – கூட்டம் வீரர் – படை வைக்கோல்- போர் விறகு – கட்டு மக்கள் – தொகுப்பு

General Tamil

நோய் நீக்கும் மூலிகைகள்

துளசிச்செடியின் இலைகளை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து ஆவிபிடித்தால் மார்புச்சளி, நீர்க்கோவை, தலைவலி நீங்கும். இதன் இலைகளை எலுமிச்சம்பழச் சாற்றுடன் அரைத்துப்போடப் படை நீங்கும்; விதைகளைப் பொடி செய்து ஒன்று அல்லது இரண்டு கிராம் அளவு உண்டால் உடற்சூடு, நீரெரிச்சல் ஆகியன அடங்கும். கீழாநெல்லியை கீழ்க்காய்நெல்லி, கீழ்வாய்நெல்லி எனவும் குறிப்பிடுவர். இது மஞ்சட்காமாலைக்கு எளிய மருந்தாக இன்றும் பயன்பட்டு வருகிறது. காய்களுடன் கூடிய முழுக் கீழாநெல்லிச்செடியைத் தூயநீரில் கழுவி அரைத்து விழுதாக்கிக் கொள்ளல் வேண்டும். ஐம்பது கிராம் அளவுள்ள விழுதை இருநூறு மில்லி லிட்டர் எருமைத்தயிருடன் கலந்து, காலை ஆறு மணியளவில் வெறும்வயிற்றில் உட்கொள்ளல் வேண்டும். இவ்வாறு மூன்று நாள் தவிராமல் உட்கொண்டால் மஞ்சட்காமாலை நோய் தீரும். மருந்துண்ணும் நாளில் மோரும், மோர்ச்சோறும் உட்கொள்வது நல்லது. கீழாநெல்லி இலைகளைக் கற்கண்டுடன் சேர்த்து அரைத்து மூன்றுகிராம் அளவு காலை மாலை இருவேளை நாலுநாள் தொடர்ந்து உட்கொள்ள சிறுநீர்த் தொடர்பான நோய்கள் நீங்கும். தூதுவளைக்கு தூதுளை, சிங்கவல்லி என வேறுபெயர்களும் உண்டு. இதன் இலைகளை நல்லெண்ணெயில் சமைத்து உணவோடு சேர்த்து இருபத்தொரு நாள் உண்டு வந்தால், சுவாசகாசம் அகலும்; இளைப்பு இருமல் போகும். வள்ளலார்  தூதுவளையை ஞானப்பச்சிலை எனப்போற்றுகிறார். தூதுவளை குரல்வளத்தை மேம்படுத்தும்; வாழ்நாளை நீட்டிக்கும். குப்பைமேனி நச்சுக்கடிகளுக்கு நல்ல மருந்தாக விளங்கும் மூலிகைச் செடியாகும். இதன் இலைகளைக் காயவைத்துப் பொடியாக்கிப் பூசினால், படுக்கைப் புண் குணமாகும். குழந்தைகளின் வயதுக்கேற்ற அளவில் உண்ணக் கொடுத்தால் மலப்புழுக்கள் வெளியேறும்; வயிறு தூய்மையாகும்; பசியைத்தூண்டும்; இலைகளுடன் மஞ்சள், உப்புச் சேர்த்து அரைத்துப் பூசினால் சொறி, சிரங்கு நீங்கும். மேனி துலங்க குப்பைமேனி என்பது பழமொழி. வறண்டநிலத் தாவரமான கற்றாழையில் பலவகையுண்டு. சோற்றுக்கற்றாழையே மருந்தாகப் பயன்படுகிறது. இதன் தோலை நீக்கிச் சோற்றுப் பகுதியைக் குறைந்தது பத்து முறையேனும் கழுவுதல் வேண்டும். அப்போதுதான் அதன் கசப்புத்தன்மையும் வழுவழுப்பும் நீங்கும். நூறு கிராம் அளவு கற்றாழையின் சோற்றுப் பகுதியை எடுத்து நூறு மில்லி நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சித் தலைக்குத் தேய்த்துவர முடிவளரும்; அதனால், இரவில் நல்ல உறக்கம் வரும். மஞ்சள் சேர்த்துக் காயம்பட்ட இடத்தில் பூசினால் காயம் குணமாகும். இதனைப் பசும்பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் மூலச்சூடு குறையும். கற்றாழைக்குக் குமரி என்னும் வேறுபெயரும் உண்டு. பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை நீக்குவதனால் குமரி கண்ட நோய்க்குக் குமரி கொடு என்னும் வழக்கு ஏற்பட்டது. முருங்கைப்பட்டையை அரைத்துத் தடவினால் முரிந்த எலும்பு விரைவில் கூடும்; வீக்கத்தைக் குறைக்கும். முருங்கைக்கீரை கண்பார்வையை ஒழுங்குபடுத்தும்; உடலை வலுவாக்கும், இரும்புச்சத்து நிறைந்துள்ளதனால் கூந்தலை வளரச் செய்வதில் இதற்குப் பெரும் பங்குண்டு. கறிவேப்பிலையும் மூலிகையே. மணத்திற்காக மட்டும் உணவில் சேர்க்கப்படும் இலையாக இதனைக் கருதுதல் கூடாது. ஒரு மண்சட்டியில் முந்நூறு மில்லி அளவு பசுவின்பாலை ஊற்றி வேடு கட்டுதல் வேண்டும் (வேடு கட்டுதல்- சட்டியின் வாயை மெல்லிய துணியால் மூடிக் கட்டுதல்). அதன்மீது கறிவேப்பிலையின் காம்பு நீக்கிய கொழுந்து இலைகளைப் போட்டுச் சிறுதீயில் அவித்தல் வேண்டும். அதனை விடக்கடி ஏற்பட்ட இடத்தில் வைத்துக் கட்டினால் மூன்று நாளில் குணமாகும். காலை, மாலை என இருவேளையும் ஐந்து கிராம் கறிவேப்பிலையைக் கழுவிச் சிறிதுசிறிதாக வாயிலிட்டு மென்று விழுங்கினால், சீதபேதி இருநாளில் குணமாகும். உணவில் சேரும் சிறுநச்சுத்தன்மையை முறிக்கும்தன்மை கறிவேப்பிலைக்கு உண்டு. கரிசலாங்கண்ணி இரத்தசோகை, செரிமானக்கோளாறு, மஞ்சட்காமாலை முதலிய நோய்களுக்குக் கரிசலாங்கண்ணி நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. அது, கண்பார்வையைத் தெளிவாக்கும்; நரையைப் போக்கும். கரிசலாங்கண்ணிக்கு வழங்கப்படும் வேறுபெயர்கள் : கரிசாலை, கையாந்தகரை, பிருங்கராசம், தேகராசம். மணித்தக்காளிக் கீரை வாய்ப்புண், குடற்புண்ணைக் குணமாக்கும். முசுமுசுக்கைக் கொடியின் வேரைப் பசுவின்பாலில் ஊறவைத்து, உலர்த்திப் பொடியாக்கிப் பசும்பால், மிளகுப்பொடி, சருக்கரையுடன் உண்டு வந்தால் இருமல் நீங்கும். அகத்திக்கீரை, பல் சார்ந்த நோய்களைக் குணமாக்கும். வல்லாரை நினைவாற்றல் பெருக உதவும். வேப்பங்கொழுந்தைக் காலையில் உண்டு வந்தால், மார்புச்சளி நீங்கும். வேப்பிலையை அரைத்துத்தடவினால் அம்மையால் வந்த வெப்புநோய் அகலும்.

General Tamil

தொகைச்சொற்கள்

பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் என்னும் தலைப்பில் இதற்கான  வினா கேட்கப்படும். இருமை இம்மை, மறுமை இருவினை நல்வினை, தீவினை இருதிணை உயர்திணை, அஃறிணை இருசுடர் ஞாயிறு, திங்கள் ஈரெச்சம் வினையெச்சம், பெயரெச்சம் மூவிடம் தன்மை, முன்னிலை, படர்க்கை முந்நீர் ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் முப்பால் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் முத்தமிழ் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் முக்காலம் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மூவேந்தர் சேரன், சோழன், பாண்டியன் முக்கனி மா, பலா, வாழை நான்மறை ரிக், யசூர், சாம, அதர்வணம் நாற்குணம் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு நாற்படை தேர், யானை, குதிரை, காலாள் நாற்றிசை கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, நாற்பால் நானிலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் நாற்பால் அரசர், அந்தணர், வணிகர்,  வேளாளர் நால்வகை பாக்கள் வெண்பா, ஆசிரியப்பா,  கலிப்பா, வஞ்சிப்பா ஐம்பால் ஆண்பால், பெண்பால், பலர்பால்,ஒன்றன்பால், பலவின்பால் ஐம்பெரும் பொருள்கள் நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் ஐந்தொகை முதல், வரவு, செலவு, இருப்பு, ஆதாயம் ஐந்திலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஐந்திணை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை அன்பின் ஐந்திணை Read more…

General Tamil

அன்னி பெசன்ட் அம்மையார்

வாழ்க்கைக்குறிப்பு: இயற் பெயர் = அன்னி உட் ஊர் = இலண்டன் நகரம் படைப்பு: பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார், அதனை “தாமரைப் பாடல்” என்பர் விழித்திடு இந்தியா இதழ்: நியூ இந்தியா காமன் வீல் குறிப்பு: 1893இல் இந்தியா வந்தார் இந்தியாவில் பிரம்ம ஞான சபை பணிகளை மேற்கொண்டார் இந்தியாவில் மகளிர் சங்கம் தொடங்கினார் 1917 கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகித முதன் பெண்மணி இவர் தான் சாரணர் இயக்கத்தை இந்தியாவில் பரப்பினார் பனாரஸ்(காசி) மத்திய இந்து பள்ளி மற்றும் கல்லூரியை நிறுவினார் தன்னாட்சி இயக்கத்தை தோற்றுவித்தார் இவர் “நான் தூங்குபவர்களை தட்டி எழுப்பும் தண்டோரா, அவர்களை விழித்தெழச் செய்து தாய் நாட்டிற்கு தொண்டு புரிய வைப்பேன்” என்றார் பிரம்ம ஞானசபையின் தலைமையிடத்தை சென்னை அடையாரில் நிறுவினார் அடையாரில் ஒரு நூலகத்தை நிறுவி பழமையான சம்ஸ்கிருத நூல்களைப் பாதுகாத்து வந்தார்.

General Tamil

இராணி மங்கம்மாள்

பெண்கள் முடி சூட்டி ஆட்சி செய்யாத நாயக்கர் மரபில் காப்பாட்சியாளராக இருந்து மதுரையை ஆண்ட பெண்மணி ராணி மங்கம்மாள். மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரின் மனைவி ஆவார். கணவர் இறந்ததும் தன் மகன் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் இளம் வயதினனாக இருந்த காரணத்தால் தான் உடன்கட்டை ஏறாமல் மகனுக்குத் துணையாக காப்பாட்சியாளராக இருந்து மதுரையைத் ஆண்டவர். திறமையான ஆட்சியாளர். சமயப் பொறை மிக்கவர். எதிர்ப்புகளைத் தன் ஆற்றலாலும் அறிவு நுட்பத்தாலும் முறியடித்தவர். 18 ஆண்டு காலம் தென்னாட்டை தனியே ஆண்ட பெண்ணரசி. இவருடைய ஆட்சி காலத்தில் மதுரைநாயக்கர்களின் தலைநகரமாக திருச்சிராப்பள்ளி விளங்கியது. தமிழக மக்கள் மனதில் அழியா புகழ் கொண்டவர் இவர். தனது அரசியல் தந்திரத்தில் வல்லவராக திகழ்ந்தார். எதிரிகளை தன் வீரத்தால் தவிடு பிடி ஆக்கியவர். மங்கம்மாளின் வரலாறு: இராணி மங்கம்மாள், மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரிடம் தளபதியாக (1659 -1682) இருந்த தப்பகுள லிங்கம நாயக்கர் அவர்களின் மகளாவார். சொக்கநாத நாயக்கர் மங்கம்மாவைத் திருமணம் செய்து கொண்டார். ஆயினும் அவரை இராணியாகப் பட்டம் சூட்டவில்லை. தஞ்சாவூரை ஆண்ட விஜயராகவ நாயக்கரின் மகளைத் திருமணம் செய்ய சொக்கநாத நாயக்கர் நினைத்தார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. 1682ம் ஆண்டு சொக்கநாத நாயக்கர் இறந்தபோது அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் மூன்று மாத குழந்தை. எனவே தன் மகனைக் காக்க வேண்டி உடன் கட்டை ஏறாத மங்கம்மாள் ஆட்சிப் பொறுப்பினை காப்பாளராக ஏற்றார். அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர்:  மங்கம்மாள் தனது மகன் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கருக்கு சின்னமுத்தம்மாள் என்பவரைத் திருமணம் செய்வித்தார். அதன் பிறகு அவருக்கு முடி சூட்டினார். அண்ணையின் உதவியோடும் அறிவுரைகளோடும் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் திறமையாக ஆட்சி செய்தார். தந்தை சொக்கநாத நாயக்கர் இழந்த பகுதிகள் சிலவற்றை போரிட்டு மீட்டார். ஏழாண்டு காலம் நல்வழியில் ஆட்சி செய்து வந்த அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு 1688 ஆம் ஆண்டு காலமானார். கணவர் இறந்த சிறிது நாளிலேயே ஆண்மகனைப் பெற்றுத்தந்த சின்ன முத்தம்மாள் உடன்கட்டை ஏறினார். அக்காலத்தில் கட்டத்தில் கம்பளத்து சமுதாய மக்களின் வழக்க படி கணவர் இறந்தால் மனைவியும் உடன் கட்டை (சதி) ஏறி தன் உயிரை மாய்துகொள்வர். அரசியல் வாரிசான சிறு குழந்தையால் நாட்டை ஆள முடியாது என்பதால் அம்மன்னரின் மகனான விசயரங்க சொக்கநாதருக்குப் பெயரளவில் பட்டம் சூட்டப்பட்டது. அவர் சார்பில் அவருடைய பாட்டியும், சொக்கநாத நாயக்கரின் மனைவியுமான மங்கம்மாள் காப்பாட்சியராக பதவி ஏற்றுக்கொண்டு, இராணி மங்கம்மாள் என்ற பெயரில் 1706 வரை செம்மையான ஆட்சி நடத்தி தமிழ் மதுரை நாயக்கர் ஆட்சி மன்னர்களில் தனகென்று ஒரு தனி இடத்தை ஏற்படுத்தி அழியா புகழை கொண்டு விளங்கினார். இராணி மங்கம்மாளின் ஆட்சி:  மங்கம்மாள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற காலத்தில் போர்கள் அதிகம் நடைபெறவில்லை. இவர் அண்டையில் உள்ள அரசுகளிடம் நட்புறவையே விரும்பினார். ஆயினும் தஞ்சை மராத்தியர்கள், முகலாயர்கள், திருவாங்கூர் அரசு, போன்றவர்களால் சவாலைச் சந்திக்க வேண்டி இருந்தது. மிகத்திறமையான இராச தந்திரியாகவும் தேர்ந்த அரசியல் அறிவும் பெற்ற மங்கம்மாள் தனக்கே உரிய சாவாலில் அரசியல் உக்தியால் வீரத்தால் எதிர்கொண்டு பகைகளை மிகத்திறமையுடன் முறியடித்து அனைவரையும் திகைக்க செய்தவர் தான் மங்கம்மாள். அவருடைய ஆட்சி காலத்தில் நல்ல பல திட்டங்களைத் தீட்டி மதுரையைச் சிறப்பாக ஆண்டார். முகலாயர்களுடனான உறவு: முகலாயப் பேரரசர் ஔரங்கசீப், தக்காணம் வரை தனது பேரரசை விரிவு செய்யும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திக்கொண்டிருந்தார். செஞ்சிக் கோட்டையில் பதுங்கி இருந்த மராத்திய மன்னன் இராசாராமைக் கைது செய்ய, தம் தளபதி ‘சல்பீகார் அலிகான்‘ என்பவரை அனுப்பினார். சல்பீகார் அலிகான் சுமார் ஏழாண்டு காலம் செஞ்சிக்கொட்டையை முற்றுகையிட்டான். முற்றுகை நடந்து கொண்டிருக்கும் போதே மற்ற தமிழக அரசுகளைப் பணிய வைத்துத் திறைப்பொருளைச் செலுத்த படைகளை அணுப்பினான். மைசூர் மான்னரும் தஞ்சை மராத்தியரும் பணிந்து திறை செலுத்தினர். இராணி மங்கம்மாளும் முகலாயர் படை வலிமையையும் தன் படை வலிமையியும் நன்குணர்ந்து முகலாயருக்குப் பணிந்துபோக முடிவு செய்தார். விலையுயர்ந்த பொருள்களை தளபதி சல்பீகார் அலிகானுக்கு அன்பளிப்பாக அனுப்பி போரைத் தவிர்த்தார். பின் முகலாயர்களின் உதவியால், மராத்தியர்களிடம் இழந்த சில பகுதிகளை மீட்டார். உடையார்பாளையச் சிற்றரசர் கைப்பற்றியிருந்த மதுரையின் பகுதிகளையும் மீட்டார். திருவிதாங்கூர்ப் போர்:  செம்மையாக ஆட்சி செய்து கொண்டு இருக்கும் பொழுது, திருவிதாங்கூர் மன்னன் ரவி வர்மன் சற்று மதுரை மன்னர்களை மதிக்காமல் இருந்து வந்தார். மேலும்  மதுரை நாயக்க அரசுக்கு செலுத்த வேண்டிய திறைப்பொருள்களைச் செலுத்தவில்லை. மேலும் கல்குளம் பகுதியில் இருந்த நாயக்கர் படையையும் தாக்கி அழித்தான். இதனை அறிந்த ராணி 1697ம் ஆண்டு தளவாய் நரசப்பையா என்பவர் தலைமையில் அனுப்பிய படை திருவிதாங்கூர் படையைத் தோற்கடித்தது. திறைப்பொருளாக பொன், பீரங்கி முதலிய பொருள்களையும் பெற்றுத் திரும்பியது. மதுரை நாயக்க அரசுக்கு உட்பட்ட சிற்றரசாக அப்போது திருவிதாங்கூர் அரசு இருந்தது. தஞ்சைப் போர்:  தஞ்சையை ஆண்ட மராத்தியருக்கும் மதுரை நாயக்கர்களுக்குமிடையில் நல்லுறவு நிலவவில்லை. தஞ்சை மராத்திய மன்னர் ஷாஜி, மதுரை நாயக்க மன்னர்களின் ஆட்சிப் பகுதிகள் சிலவற்றைக் கைப்பற்றிக் கொண்டார். இராணி மங்கம்மாள் தளவாய் நரசப்பையரை படைகளுடன் அனுப்பி அப்பகுதிகளை மீட்டார். அப்படை தஞ்சையை அச்சுறுத்தியது. எனவே தஞ்சை அமைச்சர் பாலாஜி பண்டிதர் இராணி மங்கம்மாளின் படைகளுக்குப் பெரும் பொருள் கொடுத்து அனுப்பினார். மைசூர்ப் போர்:  முகலாய அரசு தக்கானத்தை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வர நினைத்த அதே வேளையில் மைசூர் மன்னன் சிக்க தேவராயன் தனது ஆட்சியை விரிவாக்க எண்ணி மதுரையின் ஆளுகைக்குக் கீழ் இருந்த சேலம் மற்றும் கோயமுத்தூரைக் கைப்பற்றினான். 1695 –ல் திருச்சிராப்பள்ளி கோட்டையையும் முற்றுகையிட்டான். இராணி மங்கம்மாளின் படைகளால் அம்முற்றுகை முறியடிக்கப்பட்டது. சிக்கதேவராயன் தஞ்சை மற்றும் திருச்சிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் காவிரி நதியின் குறுக்கே தற்போது கண்ணம்பாடி அணை உள்ள பகுதியில் அணை கட்டி அதனைத் தடுக்க எண்ணினான். தஞ்சை நாயக்கர்களும், மதுரை நாயக்கர்களும் எதிர் எதிர் என்றாலும் எதிரியை வீழ்த்த ஓரணியில் நிற்க வேண்டும் என்பதால் அப்போது மங்கம்மாள் 1700 –ல் தஞ்சையுடனான பகையை மறந்து அதனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, தஞ்சை– மதுரைக் கூட்டுப்படை ஒன்றை உருவாக்கி சிக்க தேவ ராயர் என்ற மைசூர் மன்னனை கூட்டணியில் வீழ்த்தினார். பேருக்கு படை கிளம்பும் வேளையில் மைசூர்ப் பகுதிகளில் கடும் மழை பெய்ததால் சிக்க தேவராயன் கட்டிய அணை உடைந்தது. சிக்கல் எதுவும் இல்லாமல் இப்பிரச்சினை தற்காலிகமாக முடிவடைந்தது. இராமநாதபுரம் போர்:  இராணி மங்கம்மாளின் முதலும் கடைசியுமான் மிகப்பெரிய தோல்வியாக ராமநாதபுரம் போர் இருந்தது. Read more…

General Knowledge

இராணி லட்சுமிபாய்

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகப் போராடி, விடுதலைப் போராட்ட வீரகளின் மத்தியில் சிறந்த வீராங்கனையாகவும், தைரியத்தின் மறுவடிவமாகவும் திகழ்ந்த இராணி இலட்சுமிபாய். 1857 ஆம் ஆண்டு இந்தியக் கிளர்ச்சியில் பெரும்பங்காற்றி இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடிகளில் ஒருவராவர். பிறப்பு: 1828 -ம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி  காசியில் (இன்றைய வாரணாசியில்) மராத்தியர் குடும்பத்தைச் சேர்ந்த மௌரியபந்தர்-பகீரதிபாய் தம்பதியினருக்குப் மகளாகப் பிறந்தார் இராணி லட்சுமிபாய். Read more…

General Tamil

தில்லையாடி வள்ளியம்மை

தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக காந்தியடிகள் நடத்திய சத்தியாகிரக போராட்டத்தில் தனது பதினாறாவது வயதிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த ‘முதல் விடுதலைப் போராளி’வள்ளியம்மை. ஒரு பெண்ணாக, தமிழராக, இந்தியராக என பல பரிமாணத்தில் பெருமை சேர்த்தவர் வள்ளியம்மை. வெள்ளையர்கள் தென்னாப்பிரிக்காவை அடிமைப்படுத்தி, தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்திக் கொண்டிருந்த காலம். தென்னாப்பிரிக்க மண்ணில் கரும்பு போன்றவற்றைப் பயிரிட விரும்பிய வெள்ளையர்கள், பயிர்த்தொழில் தெரிந்த அடிமைகளைத் தேடி அலைந்தனர். அங்கிருந்த தென்னாப்பிரிக்க Read more…

General Tamil

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

இந்தியாவில் முதன்முதலில் மருத்துவப் பட்டம் பெற்ற பெண்மணியும், தமிழக சட்ட மேலவையில் முதல் பெண் உறுப்பினர் என்ற பெருமையும் பெற்றவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. நாட்டிலேயே முதல் பெண்கள் இயக்கமான இந்திய மாதர் சங்கத்தை துவக்கி கடைசிவரை அதன் தலைவியாக இருந்தவர் என்கிற பல சாதனைகளுடன் வரலாற்றுப் பக்கங்களில் இடம்பிடித்தவர். புற்று நோய் என்றாலே அனைவருக்கும் ஒரு மரணபயம் ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு ஆட்கொல்லி நோயான புற்று நோய்க்கு நம் Read more…