Current Affairs 2017

October 1

தமிழகம்

  • ஒசூர் நகரம் தொழில்துறையில் வளர்ந்து மக்கள் தொகை அதிகரித்துள்ளதால், அருகாமையிலுள்ள 8 ஊராட்சிகளை இணைத்து ஒசூர் மாநகராட்சியாக மாற்றப்படும் என முதல்வர் எடப்பாடி. பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இந்தியா

  • இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியனின் பதவிக்காலம் அக்டோபர் 16 ஆம் தேதியோடு முடிவடைய இருந்த நிலையில், இன்னும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி பண்டிகை காலத்தில், தசரா விடுமுறையில் தெலங்கானா மாநிலத்தில் பதுகம்மா எனும் பண்டிகை கொண்டாடப்படுகிறது.இது பிறந்த வீட்டிற்கு வரும் பெண்களுக்கான பண்டிகை என கூறப்படுகிறது. இந்த பண்டிகையின்போது, திருமணமாகி சென்ற பெண்கள் தங்களது தாய் வீட்டிற்கு வருவார்கள். அவர்களுக்கு புடவை போன்ற சீர்வரிசைகள் வழங்கப்படும்.
  • இந்தியாவிலே முதன்மையாக மலைப்பிரதேச மாநிலம் ஒன்றில் மின் பேருந்து சேவை , இமாச்சல பிரதேசத்தில் ரோதங் பாஸ் – மணாலி இடையே துவங்கப்பட்டுள்ளது.இது கடல் மட்டத்தில் இருந்து 13000 அடி உயரத்தில் அமைந்துள்ள சுற்றுலாத்தளம் ஆகும்.

உலகம்

  • அமெரிக்காவின் Materials Research Society’s (MRS) வழங்கும் வோன் ஹிப்பல் விருது ( Von Hippel Award ) இந்தியாவின் புகழ் பெற்ற வேதியியல் விஞ்ஞானி C.N.R. ராவ்க்கு வழங்கப்பட்டுள்ளது.இந்த விருதை பெறும் முதல் ஆசியர் இவரே.
  • அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர்களுக்கான எம்மி விருதுகள் வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.சிறந்த தொலைக்காட்சி நடிகருக்கான விருதை 19 ஆண்டுகளுக்கு பிறகு கருப்பின நடிகர் ஒருவர் பெற்றுள்ளார்.திஸ் இஸ் அஸ்’ என்ற அமெரிக்க நாடகத் தொடரில் நடித்த ஸ்டெர்லிங் கே. பிரவின் இந்த விருதினை பெற்றுள்ளார்.கடைசியாக இந்த விருதை 1998 ம் ஆண்டு கருப்பின நடிகரானஆண்டிரி ப்ராகர் பெற்றிருந்தார்.
  • ஃபோர்ப்ஸ் தொகுத்து வெளியிட்டுள்ள உலகெங்கிலும் வாழும் மிகச் சிறந்த தொழிலதிபர்கள் பட்டியலில் டாடா குழுமத்தின் கவுரவத் தலைவரான (எமிரேடஸ்) ரத்தன் டாடா, ஆர்சிலார் மிட்டல் நிறுவனத் தலைவரான லட்சுமி மிட்டல், சன் மைக்ரோ சிஸ்டம் நிறுவனத்தின் வினோத் கோஸ்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
  • சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தின் மூத்த இயக்குநராக இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இவர் இதற்கு முன்பு ஃபேஸ்புக் மற்றும் ஸ்நாப்சாட் நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

இன்றைய தினம்

இன்று உலக முதியோர் தினம் (International Day of Older Persons).

மருத்துவ வசதி மற்றும் கல்வி அறிவால் மனிதனின் சராசரி ஆயுள்காலம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் உலகளவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. முதியோர்களின் அதிகரிப்பால் ஏற்படும் சவால்களை கவனத்தில் எடுத்துக்கொண்டு பல திட்டங்களை உருவாக்க வேண்டியுள்ளது. முதியோர்களின்மீது கவனம் செலுத்த உலக முதியோர் தினம் 1991ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.

இன்று உலக சைவ தினம் (World Vegetarian Day).

தாவரங்களில் இருந்து பெறப்படும் உணவுப் பொருட்களை சைவ உணவு என்கிறோம். வட அமெரிக்கன் சைவக் கழகம் 1977ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது. இதனை 1978ஆம் ஆண்டில் சர்வதேச சைவ ஒன்றியம் அங்கீகரித்தது. மகிழ்ச்சி, கருணை மற்றும் சைவ வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

1953 – ஆந்திரா மாநிலம் உருவாக்கப்பட்டது.


Buy GK Kalanjiyam TNPSC Special Series 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கவனத்தில் கொள்க…

இத்தளத்தில் அரசுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக பாடங்கள் தொகுக்கப்பட்டுள்ளது…

மிகவும் கவனத்துடன் தொகுக்கப்பட்டிருப்பினும் சிற்சில பிழைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பிழைகளை சுட்டிக்காட்டுக… திருத்தம் செய்து சரியான பாடங்களைப் படிப்போம்…

email : editorvalavan@gmail.com

முகவரி

வளவன் பதிப்பம்

2வது தளம், பை-பாஸ் சாலை, ஆம்பூர் – 635802. வேலூர் மாவட்டம்.

Newsletter