Current Affairs 2017

October 10

தமிழகம்

1.தூய்மை இந்தியா என்ற ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இந்தியாவிலேயே சிறந்த தூய்மையான கோயில் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா

1.World Quality Congress (WQC) வழங்கும் சிறந்த விமான நிலைய பாதுகாப்பு விருது, மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலைய பாதுகாப்பை மேற்கொண்டுவரும் மத்திய தொழிற்பாதுகாப்பு படைக்கு ( CISF ) வழங்கப்பட்டுள்ளது.
2.தெற்காசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி முதன்முறையாக இந்தியாவில், குவஹாத்தியில் டிசம்பர் 2017ல் நடைபெறவுள்ளது.
3.ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் மிக உயர்ந்த லே பகுதியில் கட்டப்பட்ட பிரதாம் – ஷியோக் பாலத்தை பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்துள்ளார்.இந்தப் பாலம் லே பகுதியையும் காரகோரம் பகுதியையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக காஷ்மீரில் தார்புக் – சையோக் – தவ்லத் பெக் ஓல்டே பகுதிகளுக்கு ராணுவ தளவாடங்களை எளிதில் எடுத்து செல்ல முடியும்.
4.சூரத் மாநகராட்சி கல்வி வாரியமும் , இஸ்ரோ அமைப்பும் சேர்ந்து சூரத் நகரில் இஸ்ரோவின் படைப்புகளின் கண்காட்சி நடைபெற்றுள்ளது. இதனை மத்திய அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் துவக்கி வைத்துள்ளார்.
5.பழங்குடியினர் கைவினைப்பொருட்களை விற்பனை செய்ய TRIFED ( Tribal Cooperative Marketing Development Federation of India Limited ) அமைப்பு , மின் வணிக நிறுவனமான அமேசான் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

உலகம்

1.மணிக்கு 2,100 கிலோ மீட்டர் வேகத்தில் எதிரி நாட்டின் ரேடாரில் சிக்காமல் பறந்து சென்று தாக்குதல் நடத்தும் ” செங்டு J-20 ” ரக போர் விமானம் சீன விமானப்படையில் அதிகாரபூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது.
2.உலகின் மிகப்பெரிய விமானமான Stratolaunch சோதனை ஓட்டம் செய்யப்பட்டுள்ளது.இந்த விமானத்தில் 6 இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன.இதன் உரிமையாளர் – மைக்ரோசாப்ட் இணை நிறுவனரான பால் ஆலன் ஆவார்.

இன்றைய தினம்

1.இன்று உலக மனநல தினம் (World Mental Health Day).
இந்தியாவில் 15 சதவீதம் பேர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என இந்திய மன நல மருத்துவக்கழகம் தெரிவிக்கிறது. மனிதனின் மன ஆரோக்கியம் மற்றும் உலக நல்லெண்ணத்திற்காகவே உலக மனநல தினம் கொண்டாடப்படுகிறது. மனநலத்தில் ஏற்படும் பாதிப்புகளை மக்களிடம் விளக்குதல், முறையாக மருத்துவ ஆலோசனை எடுத்துக்கொள்ள வேண்டும் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.
2.1949 – விடுதலை பெற்ற இலங்கையின் புதிய இராணுவம் உருவாக்கப்பட்டது.
3.1991 – தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.


Buy GK Kalanjiyam TNPSC Special Series 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கவனத்தில் கொள்க…

இத்தளத்தில் அரசுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக பாடங்கள் தொகுக்கப்பட்டுள்ளது…

மிகவும் கவனத்துடன் தொகுக்கப்பட்டிருப்பினும் சிற்சில பிழைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பிழைகளை சுட்டிக்காட்டுக… திருத்தம் செய்து சரியான பாடங்களைப் படிப்போம்…

email : editorvalavan@gmail.com

முகவரி

வளவன் பதிப்பம்

2வது தளம், பை-பாஸ் சாலை, ஆம்பூர் – 635802. வேலூர் மாவட்டம்.

Newsletter