October 2

இந்தியா

  • தென்னிந்திய இஸ்லாமியக் கல்வியல் கழகத்தின் தலைவராகத் ஆற்காடு இளவரசர் நவாப் முஹம்மது அப்துல்அலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.
  • செல்போன் அழைப்புக்கான இணைப்பு கட்டணத்தை ( Inter connection charges ) 14 பைசாவில் இருந்து 6 பைசாவாக குறைத்து டிராய் உத்தரவிட்டுள்ளது.மேலும் 2020ல் இந்த கட்டணங்கள் அனைத்தும் முற்றிலும் நீக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

உலகம்

  • மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உலகின் முதல் மூலக்கூறு ரோபோவை கண்டறிந்துள்ளனர்.
  • 2019ல் பிரான்சில் நடைபெறவுள்ள FIFA பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியின் முழக்கமாக ( Slogan ) Dare To Shine அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் போட்டியின் இலச்சினையாக ( Logo ) 8வது உலக கோப்பை போட்டி என்பதை குறிக்கும் விதமாக, கால்பந்தை தாங்கிய கோப்பையில் 8 குறுக்கு கோடுகள் இடப்பட்ட கோப்பை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • ஆசியா – ஐரோப்பிய பொருளாதார அமைச்சர்கள் 7வது மாநாடு, தென்கொரியாவின் சியோலில் நடைபெற்றுள்ளது.இந்தியா சார்பில் வர்த்தகத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கலந்து கொண்டுள்ளார்.
  • சீனா மற்றும் ஆஸ்திரேலியா ராணுவங்கள் இணைந்து முதன்முறையாக சீனாவில் பாண்டா – கங்காரு 2017 என்ற பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.இதற்கு முன் 2015 & 2016ல் இருநாடுகளும் இணைந்த பயிற்சி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுள்ளது.

விளையாட்டு

  • தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்புப் போட்டியின் (ITF Tennis Tournament) மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ருத்துஜா போஸ்லே சீனாவின் ஹுவா-சென்-லீயை வீழ்த்தி பட்டம் வென்றுள்ளார்.
  • சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தடகள அமைப்பின் உறுப்பினராக , சர்வதேச குத்துச்சண்டை அமைப்பின் பிரதிநிதியாக மேரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கரோலினா மரின், சீனாவின் பிங் ஜியோவை வீழ்த்தி பட்டம் வென்றுள்ளார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டென்மார்க் நாட்டின் Viktor Axelsen , மலேசியாவின் Lee Chong Wei ஐ வீழ்த்தினார்.

இன்றைய தினம்

இன்று சர்வதேச அகிம்சை தினம் (International Non-Violence Day).

  • காந்தியடிகள் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னுமிடத்தில் 1869ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் நாள் பிறந்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இவர் சத்தியம், அகிம்சை என்னும் இரண்டு கொள்கைகளைக் கடைப்பிடித்தார். காந்தியின் அகிம்சை தத்துவம் இன்றைக்கும் பொருந்தும் என ஐ.நா. சபை அறிவித்தது. அதன் அடிப்படையில் காந்தி பிறந்த தினத்தை சர்வதேச அகிம்சை தினமாக 2007இல் அறிவித்தது.

Buy GK Kalanjiyam TNPSC Special Series

1 Comment

bala · December 21, 2017 at 5:11 pm

sir I needed current affairs very useful it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கவனத்தில் கொள்க…

இத்தளத்தில் அரசுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக பாடங்கள் தொகுக்கப்பட்டுள்ளது…

மிகவும் கவனத்துடன் தொகுக்கப்பட்டிருப்பினும் சிற்சில பிழைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பிழைகளை சுட்டிக்காட்டுக… திருத்தம் செய்து சரியான பாடங்களைப் படிப்போம்…

email : editorvalavan@gmail.com

முகவரி

வளவன் பதிப்பம்

2வது தளம், பை-பாஸ் சாலை, ஆம்பூர் – 635802. வேலூர் மாவட்டம்.

Newsletter