Current Affairs 2017

October 3

தமிழகம்

  • முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து தமிழக அரசு ஆணை பிறபித்துள்ளது.

இந்தியா

  • மொபைல் போனின் IMEI எண்ணை மாற்றினால் 3 ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அறிவித்துள்ளது.
  • நாட்டின் மூன்றாவது பெரிய விருதான பத்மபூஷன் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான முன்னாள் கேப்டன் தோனியின் பெயரை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.
  • கேரளாவின் முதல் பெண் காவல் தலைமை இயக்குநராக ( DGP ) R. ஶ்ரீலேகா IPS நியமிக்கப்பட்டுள்ளார்.
    1987ல் கேரளாவில் இருந்து தேர்வு பெற்ற முதல் பெண் IPS என்ற பெருமை பெற்றவர் இவர்.
  • பொருளாதார விவகார ஆலோசனை குழுவின் தலைவராக , நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் தோப்ராயை நியமனம் செய்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
  • மும்பை அரபிக்கடல் பகுதியில் ONGC சார்பில் புதிதாக WO – 24 – 3 என்ற எண்ணெய் வயலை கண்டுபிடித்துள்ளனர். இதில் 20 மில்லியன் டன் எண்ணைய் வளம் இருப்பதாக மதிப்பிட்டுள்ளனர்.

உலகம்

  • ஜெர்மன் அதிபர் தேர்தலில் கிறிஸ்டியன் ஜனநாயக யூனியன் கட்சி சார்பில் போட்டியிட்ட ஏஞ்சலா மெர்கல் வெற்றி பெற்றுள்ளார்.இதன்மூலம் ஏஞ்சலா மெர்கல் 4வது முறையாக ஜெர்மனி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • அமெரிக்காவின் ஹவாய் தீவில் 5th Pacific Air Chiefs Symposium எனும் மாநாடு நடைபெற்றுள்ளது.இதில் இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 22 நாடுகளின் விமானப்படை தளபதிகள் கலந்து கொண்டுள்ளனர்.இந்தியா சார்பில் ஏர் சீப் மார்ஷல் பீரேந்திர சிங் தனோவா கலந்துள்ளார்.
  • 61வது வருடாந்திர , சர்வதேச அணுசக்தி முகமையின் கூட்டம் ஆஸ்திரியா நாட்டின் வியன்னாவில் நடைபெற்றுள்ளது.இந்தியா சார்பில் அணுசக்தி கமிசன் தலைவர் டாக்டர். சேகர் பாசு கலந்து கொண்டுள்ளார்.
  • இலங்கையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற் பயிற்சி மையத்தை தரம் உயர்த்தி வழங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.

இன்றைய தினம்

  • 1932 – ஈராக், பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

Buy GK Kalanjiyam TNPSC Special Series 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *