Current Affairs 2017

August 9


விளையாட்டு

1.லண்டனில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் கென்யா வீராங்கனை பெய்த் கிபிஜியான் தங்க பதக்கத்தை கைப்பற்றினார்.அமெரிக்காவை சேர்ந்த ஜெனீபர் சிம்சன் வெள்ளி பதக்கத்தையும்,தென்னாப்பிரிக்க வீராங்கனை காஸ்டர் செமன்யா வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினார்கள்.டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் வெனிசுலா வீராங்கனை யூலிமர் ரோஜஸ் தங்க பதக்கத்தை கைப்பற்றினார்.கொலம்பியாவை சேர்ந்த கேட்ரின் வெள்ளி பதக்கத்தையும்,கஜகஸ்தான் வீராங்கனை ஒல்கா வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினார்கள்.சங்கிலி குண்டு எறிதலில் போலந்து வீராங்கனை விலோ மர்சிக் தங்க பதக்கத்தை கைப்பற்றினார்.சீன வீராங்கனை வாங் வெள்ளி பதக்கத்தையும்,போலந்தை சேர்ந்த மால்வினா கோப்ரான் வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினார்கள்.ஆண்களுக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஜமைக்கா வீரர் உமர் மெக்லியாட் தங்க பதக்கத்தை கைப்பற்றினார்.செர்ஜி செபன் கோவ் வெள்ளி பதக்கத்தையும்,அங்கேரி வீராங்கனை பலாஸ் வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினார்கள்.

இன்றைய தினம்

1.இன்று நாகசாகி தினம் (Nagasaki Day).
அமெரிக்கா 1945ஆம் ஆண்டு ஆகஸ்டு 9 அன்று பேட் மேன் (Fat Man) என்னும் அணுகுண்டை ஜப்பானில் உள்ள நாகசாகி என்கிற நகரத்தின் மீது வீசியது. இக்குண்டு 3.5 மீட்டர் நீளமும், 1.5 மீட்டர் விட்டமும், 4500 கிலோ எடையும், 1 கிலோ புளுட்டோனியத்தையும் கொண்டது. இக்குண்டு வீசப்பட்ட சில நொடிகளில் 74000 பேர் உயிர் இழந்தனர். அணுகுண்டின் விபரீதத்தை நினைவு கூற இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
2.இன்று சர்வதேச உலக பூர்வ குடிமக்கள் தினம் (International Day of the World’s Indigenous People).
ஐ.நா. பொதுச்சபை 1994ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு தீர்மானத்தில் ஆகஸ்டு 9 ஐ உலக பூர்வ குடிமக்கள் தினமாக அறிவித்தது. இத்தினம் 1995ஆம் ஆண்டுமுதல் கடைப்பிடிக்கப்படுகிறது. பூர்வ குடிகளின் கலாச்சாரம் பாதுகாத்தல், அரசியல், கல்வி, மொழி போன்றவற்றைக் கொடுத்தல், இவர்களுக்கு எதிராக நடக்கும் ஆக்கிரமிப்பை தடுத்தல் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *