July 29

இந்தியா

1.இந்தியாவில் முதல் மாநிலமாக, மகாராஷ்டிரா அரசு சமூக புறக்கணிப்பு ( முன்னெச்சரிக்கை , தடை & நிவாரணம் ) சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
2.வாரத்தில் ஒரு நாள் கட்டாயமாக அனைத்து பள்ளிகள், கல்லுாரிகள், பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில், வந்தே மாதரம் பாடலை ஒலிபரப்ப வேண்டும்; பாட வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி எம்.வி.முரளிதரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
3.மத்திய விளையாட்டு துறையால் வழங்கப்படும் கேல் ரத்னா, அர்ஜூனா விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான குழு ஓய்வு பெற்ற நீதிபதி சி.கே.தாக்கர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், தடகள வீராங்கனை பி.டி.உஷா, குத்துச் சண்டை வீரர் முகுந்த் கிலேகர், கபடி வீரர் சுனில் தப்பாஸ், பாரா தடகள வீராங்கனை லதா மாத்வி உள்ளிட்ட 12 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
4.பீகார் சட்டசபையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ள நிதிஷ்குமார் பெரும்பாண்மையை நிரூபித்து வெற்றி பெற்றுள்ளார்.

விளையாட்டு

1.இங்கிலாந்தில் அண்மையில் நடைபெற்ற பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் இறுதிப்போட்டி வரை முன்னேறி அசத்தியதற்காக ஐதராபாத்தில் வசிக்கும் கேப்டன் மிதாலிராஜ்க்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகையும், அடுக்குமாடி குடியிருப்பில் 600 சதுரஅடியில் வீடும் வழங்கப்படும் என்று தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.மேலும் நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம்

1.இன்று சர்வதேச புலிகள் தினம் (International Tiger’s Day).
உலகின் கண்ணைக் கவரும் பெரிய விலங்குகளில் மிகப் பிரபலமானது புலி மட்டுமே. புலியின் எண்ணிக்கை உலகளவில் வேகமாகக் குறைந்துகொண்டே வருகிறது. புலிகள் பாதுகாப்பு மாநாடு ஜெயின்ட், பீட்டர்ஸ்பர்க் நகரில் 2010ஆம் ஆண்டு நடைபெற்றது. இயற்கையால் படைக்கப்பட்ட இந்த புலிகளை பாதுகாக்க வலியுறுத்தி சர்வதேச புலிகள் தினத்தை அறிவித்தது.
2.1944 – இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
3.1958 – ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி நிறுவனம் நாசா ஆரம்பிக்கப்பட்டது.


Buy GK Kalanjiyam TNPSC Special Series 

1 Comment

bala · December 21, 2017 at 5:11 pm

sir I needed current affairs very useful it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கவனத்தில் கொள்க…

இத்தளத்தில் அரசுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக பாடங்கள் தொகுக்கப்பட்டுள்ளது…

மிகவும் கவனத்துடன் தொகுக்கப்பட்டிருப்பினும் சிற்சில பிழைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பிழைகளை சுட்டிக்காட்டுக… திருத்தம் செய்து சரியான பாடங்களைப் படிப்போம்…

email : editorvalavan@gmail.com

முகவரி

வளவன் பதிப்பம்

2வது தளம், பை-பாஸ் சாலை, ஆம்பூர் – 635802. வேலூர் மாவட்டம்.

Newsletter