Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

Current Affairs 2017

October 12

இந்தியா

1.BSNL நிறுவனம், தொலைத்தொடர்பு சாதனங்கள் உற்பத்தியாளரான VNL நிறுவனத்துடன் இணைந்து வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவுவதற்காக Relief 123 என்ற அவசர கால உதவியினை வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.Relief 123 சேவையானது ResQMobil என்ற ஒருங்கிணைந்த நடமாடும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும்.
2.சிகரட், பீடி மற்றும் சுவைக்கக் கூடிய புகையிலை பொருட்களை உதிரியாக விற்க கர்நாடகா தடை செய்துள்ளது.
3.மத ரீதியிலான புனித யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு மானியம் வழங்கும் புனீதா யாத்ரா திட்டத்தை கர்நாடகா முதல்வர் சித்தராமைய்யா அறிமுகம் செய்துள்ளார்.
4.ராஜஸ்தானின் பிலானியில் உள்ள Central Electronics Engineering Research Institute (CEERI) ஆராய்ச்சியாளர்கள் 60 வினாடியில் பாலில் கலப்படம் செய்யப்பட்ட பொருள்களை கண்டுபிடிக்கும் கையடக்க கருவி Ksheer Scannerஐ கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவியை ஜனாதிபதி செப்டம்பர் 26ல் நாட்டுக்கு அர்பணித்துள்ளார்.
5.பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்ட சர்வதேச சூரிய கூட்டணியின் முதல் மாநாடு , ஹரியானாவின் குருகிராமில் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கிறது.
6.ஓ.பி.சி உட்பிரிவை ஆய்வு செய்யும் குழுவின் தலைவராக டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரோகிணியை, அரசியலமைப்பு சட்டம் 340ன் கீழ் நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குழுவின் உறுப்பினராக ஜே.கே.பஜாஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக 1) இயக்குநர், இந்திய மானுடவியல் ஆய்வு ,02) பதிவாளர் ஜெனரல் ,03) இணை செயலாளர், மத்திய சமூகநீதி மற்றும் அமலாக்கத்துறை அமைச்சகம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
7.பிரதமர் மோடி ஹிமாச்சல பிரதேசத்தில், பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை ( AIIMS ) அமைக்க அடிக்கல் நாட்டியுள்ளார்.மேலும் காணொளி காட்சி மூலம் உனா ( UNA ) நகரில் IIT அமைப்பதற்கான அடிக்கல்லும் , Kangra மாவட்டத்தில் Khandrori நகரில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு எஃகு செயலாக்க ஆலையை துவக்கியும் வைத்துள்ளார்.
8.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது முதல் அரசுமுறைப் பயணமாக #டிஜிபவுட்டி என்ற ஆப்பிரிக்க நாட்டுக்கு சென்றுள்ளார்.இந்த நாட்டில் தான் சீனா சமீபத்தில் தனது படைத்தளத்தை நிறுவியுள்ளது.
9.இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் (ICMR) இயக்குநரான சௌம்யா சுவாமிநாதன் , உலக சுகாதார அமைப்பின் திட்டங்களுக்கான இணை பொது இயக்குநராக ( Deputy Director General , Programmes of WHO ) நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் வேளாண் விஞ்ஞானி M.S. சுவாமிநாதன் மகளாவார்.இவர் ஏற்கனவே ஐ நாவால் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு மருந்து எதிர்ப்பு சக்தியைக் கொண்ட நுண்ணுயிரிகள் பற்றிய ஆய்விக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய தினம்

1.இன்று உலகக் கண்பார்வை தினம் (World Sight Day).
உலகளவில் சுமார் 37 மில்லியன் மக்கள் கண்பார்வையின்றி வாழ்கின்றனர். மேலும் சுமார் 124 மில்லியன் மக்கள் குறைந்த பார்வையுடனே வாழ்கின்றனர். குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ பற்றாக்குறையினால் பார்வைக் கோளாறு ஏற்படுகிறது. குறிப்பாக 75 சதவீதமான பார்வைக்குறைபாடுகளை சரிசெய்து விட முடியும். கண் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாவது வியாழன் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
2.உலக ஆர்த்ரைடிஸ் தினம் (World ArthritisDay).
ஆர்த்ரைடிஸ் எனப்படுவது மூட்டு வலியாகும். இது ஆண், பெண், குழந்தைகள், சிறு வயதினர் என எல்லா தரப்பினரையும் தாக்கும் நோய். முன்னோர்களிடமிருந்து பரம்பரை நோயாகவும் பரவும். கீல்வாத நோயால் வரும் பெரும்பாலான ஆர்தரைடிஸ்கள் உடலின் பெரும்பாலான பகுதிகளைத் தாக்குகிறது. இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.


Buy GK Kalanjiyam TNPSC Special Series 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

bala · December 21, 2017 at 5:11 pm

sir I needed current affairs very useful it

Comments are closed.