October 14

இந்தியா

1.தூய்மை இந்தியா திட்டம் போன்று , ஆந்திரா முதல்வர் தூய்மை ஆந்திரா திட்டத்தினை துவக்கியுள்ளார்.தூய்மை ஆந்திரா திட்டத்தின் தூதராக பேட்மிண்டன் வீராங்கனை சிந்து நியமிக்கப்பட்டுள்ளார்.
2.தேசிய சுற்றுலா விருதுகள் வழங்கும் விழாவில், சிறப்பு சிறந்த சுற்றுலா வழிகாட்டி விருது 91 வயதான திருமதி. ரமா கண்டேவலாவுக்கு ( Rama Khandwala) வழங்கப்பட்டுள்ளது.
3.குருகிராமில் அமைந்துள்ள VVDN நிறுவனம் , உலகின் முதல் Block Chain தொழில்நுட்பத்திலான அலைபேசி BitVault ஐ உருவாக்கியுள்ளது.
4.இந்தியாவிலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ITI அமைக்க அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ருகாரில் அமைக்க, அம் மாநில முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார்.

உலகம்

1.பிரிட்டனின் சிறு மற்றும் குறு முதலீட்டாளர்களை இந்தியாவில் முதலீடு செய்வதை ஊக்குவிக்க, இந்தியா சார்பில் பிரிட்டனில் Access India Programme (AIP) – இந்தியாவை அணுகுவோம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
2.பனிப்பாறைகளை உடைக்க கூடிய அணு ஆற்றல் கொண்ட Sibir என்ற கப்பலை ரஷ்யா உருவாக்கியுள்ளது.ரஷ்யாவிடம் ஏற்கனவே இதுபோன்ற கப்பல்கள் ( Arktika & Ural ) இரண்டு உள்ளது.

விளையாட்டு

1.2008 மற்றும் 2012 ஒலிம்பிக்கில் நடைபெற்ற ஊக்க மருந்து சோதனையில் தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்திய காரணங்களுக்காக , சர்வதேச பளுதூக்கும் சம்மேளனம் ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், அர்மீனியா, அஜர்பைஜான், துருக்கி, மால்டோவா, பெலாரஸ் மற்றும் உக்ரைன் ஆகிய 9 நாடுகளுக்கு 1 ஆண்டு தடை விதித்துள்ளது.
2.முதன்முறையாக ஆண்களுக்கான FIFA U17 உலக கோப்பை கால்பந்து போட்டியில் உதவி நடுவர்களாக பெண்கள் பணியாற்றுவார்கள் சர்வதேச கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.
3.ரஷ்யாவின் Kazan நகரில் நடைபெற்ற வூஷு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ( Wushu World Championships ) முதன்முறையாக இந்திய வீராங்கனை தங்கம் வென்றுள்ளார்.75 கிலோ sanda பிரிவில் இந்திய வீராங்கனை பூஜா கடியன் ( Pooja Kadian ) தங்கம் வென்றுள்ளார்.
4.சீனாவில் நடந்து முடிந்த 20-வது ஆசிய மூத்தோர் தடகளப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற திண்டுக்கல் மாவட்டம் கதிரனபட்டியைச் சேர்ந்த எம்.ஏ.சுப்பையா, குண்டு எறிதலில் தங்கம், நீளம் தாண்டுதலில் வெள்ளி, வட்டு எறிதலில் வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்றுள்ளார்.

இன்றைய தினம்

1.இன்று உலகத்தர நிர்ணய தினம் (World Standards Day).
உற்பத்தி செய்யும் பொருட்கள் சர்வதேச அளவில் தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக 1946ஆம் ஆண்டு, அக்டோபர் 14 இல் சர்வதேச தர நிர்ணய அமைப்பு (ISO) உருவாக்கப்பட்டது. உலகத் தர நிர்ணய தினம் 1970ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது. நுகர்வோர்க்கு தரமான பொருட்களை வழங்க வேண்டும். தரமான பொருட்களே உலகைக் காக்கும் என தர நிர்ணய அமைப்பு கூறுகிறது.


Buy GK Kalanjiyam TNPSC Special Series 

 

1 Comment

bala · December 21, 2017 at 5:11 pm

sir I needed current affairs very useful it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கவனத்தில் கொள்க…

இத்தளத்தில் அரசுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக பாடங்கள் தொகுக்கப்பட்டுள்ளது…

மிகவும் கவனத்துடன் தொகுக்கப்பட்டிருப்பினும் சிற்சில பிழைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பிழைகளை சுட்டிக்காட்டுக… திருத்தம் செய்து சரியான பாடங்களைப் படிப்போம்…

email : editorvalavan@gmail.com

முகவரி

வளவன் பதிப்பம்

2வது தளம், பை-பாஸ் சாலை, ஆம்பூர் – 635802. வேலூர் மாவட்டம்.

Newsletter