September 28

இந்தியா

1.பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் செல்போன் கோபுரங்களை ஒரே தொகுப்பாக உருவாக்கி, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் முழு சொந்தமான தனி நிறுவனமாக உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2.பிரதமர் அலுவலகத்துறையின் இணையமைச்சர் ஜிதேந்திரா சிங் செப்டம்பர் 20ல் முதல் பென்ஷன் அதாலத்தை துவக்கி வைத்துள்ளார்.மேலும் பென்ஷனர்கள் அரசின் சேவைகளை பெறுவதற்கு Anubhav என்ற மொபைல் ஆப் ஒன்றையும்,ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்கள் தங்களது பணி அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் அனுபவ் எனும் இணையதளத்தையும் ( Portal ) துவக்கி வைத்துள்ளார்.2017 ஆம் ஆண்டின் அனுபவ் விருதுகள் 17 பென்ஷனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
3.ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை 2022க்குள் உருவாக்கும் குறிக்கோளை இலக்காக கொண்ட Mission Mode to address Under – Nutrition என்ற மாநாடு டெல்லியில் நடைபெற்றுள்ளது.
4.பாராளுமன்ற விவகாரத்துறை சார்பிலான New India – We Resolve to Make என்ற கண்காட்சி மற்றும் கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்ற இடம் – மும்பை , பாந்த்ரா ரயில் நிலையம் ஆகும்
5.2வது சர்வதேச யோகா திருவிழா மற்றும் சர்வதேச யோகா விளையாட்டு போட்டி – 2017 ஶ்ரீநகரில் நடைபெறுகிறது.
6.பெண் விவசாயிகளின் பல்வேறு விவசாய வளர்ச்சிக்கு வித்திட்ட புனேவைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் Swayam Shikshan Prayog (SSP) , 2017 UN Equator Prize பெற்றுள்ளது.
7.மும்பை காவல்துறை சார்பில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க, பெண் காவலர்கள் மூலம் மாணவர்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தை மீண்டும் துவக்கியுள்ளனர்.இதற்கு Police Didi என பெயரிட்டுள்ளனர்.
8.மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் கொல்கத்தாவில் அமைந்துள்ள Dr Anjali Chatterjee Regional Research Institute for Homoeopathy (RRIH)ல் இந்தியாவின் முதல் வைராலாஜி ஆய்வு கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வகத்தில் சிக்கன் குனியா, டெங்கு, ஸ்வைன் புளூ உள்ளிட்ட நோய்களுக்கு ஹோமியோபதியில் புதிய மருந்துகளை கண்டுபிடிப்பதற்கான ஆய்வு நடைபெறும்.
9.ரூ.1.10 லட்சம் கோடி செலவில் உருவாகும் மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்கு பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இணைந்து அகமதாபாத்தில் செப்டம்பர் 14ல் அடிக்கல் நாட்டியுள்ளனர்.திட்ட மதிப்பில் ரூ. 88,000 கோடியை ஜப்பான் கடனாக வழங்குகிறது.மொத்த தூரம் – 508 கி.மீ. இதில் 468 கி.மீ. தூரத்திற்கு உயர்மட்ட பாதையாகவும், 27 கி.மீ சுரங்க பாதையாகவும், 13 கி.மீ. தரையிலும் செல்லும். சுரங்க பாதையில் 7 கி.மீ. கடலுக்கு அடியில் செல்லும்.இந்த திட்டம் ஜப்பானின் Shinkansen தொழில்நுட்பத்தில் செயல்படுத்தப்படுகிறது. ரயிலின் வேகம் மணிக்கு 320 முதல் 350 கி.மீ வேகத்தில் இருக்கும். திட்டம் 2022ல் நிறைவு பெறும்.National High Speed Rail Corporation Of India இதனை செயலாக்கம் செய்கிறது.

இன்றைய தினம்

1.இன்று உலக ரேபிஸ் தினம் (World Rabies Day).
ரேபிஸ் என்பது ஒரு வகையான வைரஸ். இது வௌவால், நரி, ஓநாய் மற்றும் நாய் ஆகியவற்றை எளிதில் தாக்கும். ரேபிஸ் தாக்கிய விலங்கு மனிதனைக் கடித்தால் இந்நோய் மனிதனை தாக்கிவிடும். இந்நோய்க்கு லூயி பாஸ்டர் என்பவர் 1885ஆம் ஆண்டில் மருந்தைக் கண்டுபிடித்தார். இவர் மறைந்த செப்டம்பர் 28ஆம் தேதியை உலக ரேபிஸ் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

 

1 Comment

bala · December 21, 2017 at 5:11 pm

sir I needed current affairs very useful it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கவனத்தில் கொள்க…

இத்தளத்தில் அரசுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக பாடங்கள் தொகுக்கப்பட்டுள்ளது…

மிகவும் கவனத்துடன் தொகுக்கப்பட்டிருப்பினும் சிற்சில பிழைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பிழைகளை சுட்டிக்காட்டுக… திருத்தம் செய்து சரியான பாடங்களைப் படிப்போம்…

email : editorvalavan@gmail.com

முகவரி

வளவன் பதிப்பம்

2வது தளம், பை-பாஸ் சாலை, ஆம்பூர் – 635802. வேலூர் மாவட்டம்.

Newsletter