September 30

இந்தியா

1.தமிழகத்தின் புதிய முழுநேர கவர்னராக பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.மேலும் பீகார் மாநில கவர்னராக சத்ய படேல், அருணாச்சல பிரதேச மாநில கவர்னராக பி.டி.மிஸ்ரா, அசாம் மாநில கவர்னராக ஜக்தீஸ் முஹி மற்றும் மேகாலயா மாநிலத்திற்கு கங்கா பிரசாத் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். யூனியன் பிரதேசமான அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநராக தேவேந்திர குமார் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான அறிவிப்பை குடியரசுத்தலைவர் மாளிகை இன்று வெளியிட்டுள்ளது.
2.சர்வதேச முந்திரி மாநாடு Kaju India 2017 கோவாவில் நடைபெற்றுள்ளது.
3.ஆளில்லா விமானம் மூலம் கட்டிடங்களை படம் எடுத்து வரிவிதிக்கும் முறையை புதுச்சேரி முதல்அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்துள்ளார்.
4.அரசியல் நையாண்டி திரைப்படமான ‘நியூட்டன்’ (இந்தி) 2018 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதில் திரையிடப்பட தேர்வு செய்யப்பட்டுள்ளது.இப்படத்தை அமித் மசூர்கர் இயக்கியுள்ளார்.
5.மத்திய சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், சிறுபான்மையின கைவினை கலைஞர்களின் படைப்புகளை சந்தைப்படுத்தும் / காட்சிப்படுத்தும் Hunar Hatt என்ற கண்காட்சி புதுச்சேரியில் செப்டம்பர் 24 – 30 வரை நடைபெறுகிறது.
6.இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, யுனைட்டைட் பாங்க் ஆப் இந்தியா, சென்டிரல் வங்கி, ஹெச்.டி.எப்.சி., ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றின் கார்டுகள் மூலமே இனி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் அறிவித்து உள்ளது.
7.திருநங்கைகளின் வாழ்கைத்தரத்தை மேம்படுத்தும் விதமாக அவர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம், வீடு, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து விதமான அடையாள அட்டை, வேலைவாய்ப்பை அளிக்கும் விதமான திட்டம் ஆகியவற்றை ஆந்திர முதல்வர் அறிவித்துள்ளார்.
8.ஜம்மு-காஷ்மீரின் முதல் இ-கோர்ட் வசதியை ஸ்ரீநகர் கோர்ட்டில் அம்மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதி பதார் டுரேஸ் தொடங்கி வைத்துள்ளார்.
9.பிரதமர் மோடி தனது நாடாளுமன்ற தொகுதியான வாரணாசியில் Jal Ambulance (water ambulance) எனப்படும் ஆம்புலன்ஸ் படகு வசதி,Jal Shav Vahan (water-based vehicle for carrying bodies) எனப்படும் அமரர் ஊர்தி படகு வசதி மற்றும் வாரணாசியில் இருந்து குஜராத்தின் வதோதராவிற்கு 3வது மகாமனா விரைவு ரயில் சேவையை துவக்கி வைத்துள்ளார். மேலும் ஷஹன்ஷாபூரில் பசு ஆரோக்கிய கண்காட்சியையும் [ Pashu Arogya Mela —cattle health fair ],Izzat ghar எனும் பெயரிலான ஒருங்கூணைந்த சுகாதார வளாகம் ( Toilet complex ) கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.
10.” கேலோ இந்தியா ” திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படும் தடகள வீரர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

இன்றைய தினம்

1.இன்று பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள் (International Translation Day).
2.2003 – தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது.

 

1 Comment

bala · December 21, 2017 at 5:11 pm

sir I needed current affairs very useful it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கவனத்தில் கொள்க…

இத்தளத்தில் அரசுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக பாடங்கள் தொகுக்கப்பட்டுள்ளது…

மிகவும் கவனத்துடன் தொகுக்கப்பட்டிருப்பினும் சிற்சில பிழைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பிழைகளை சுட்டிக்காட்டுக… திருத்தம் செய்து சரியான பாடங்களைப் படிப்போம்…

email : editorvalavan@gmail.com

முகவரி

வளவன் பதிப்பம்

2வது தளம், பை-பாஸ் சாலை, ஆம்பூர் – 635802. வேலூர் மாவட்டம்.

Newsletter