Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

TNPSC General Tamil

பொருத்துதல் – பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் (II) புகழ்பெற்ற நூல் – நூலாசிரியர்

இந்தப் பகுதியில் மிகவும் எளிதாக மதிப்பெண் பெறலாம்பொதுவாக ஒரு வார்த்தைக் குறிப்பிடப்பட்டு அதற்கான நான்கு அர்த்தங்களில் சரியான ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உதாரணம் -1

பொருத்துக:
1.நாவாய்     அ.உலகு 
2.வையகம்    ஆ.படகு 
3.விண்மீன்    இ.மேகம் 
4.எழிலி           ஈ.நட்சத்திரம்
விடை 

உதாரணம் -2

மணநூல் என்ற அடைமொழியால் குறிப்பிடப்படும் நூல எது ? 

 1. திருக்குறள்
 2. கம்ப ராமாயணம்
 3. சீவக சிந்தாமண 
 4. பழமொழி நானூறு
விடை சீவக சிந்தாமணி
எப்படித் தயாராவது ?
சில வார்த்தைகள் உங்களுக்கு புதிதாக கூட இருக்கலாம்ஆனால் பொதுத்தமிழ் பகுதியைப் பொறுத்த வரையில் 10 ஆம் வகுப்பு தரத்தில் கேள்விகள் கேட்கப்படுவதால். தமிழ் வார்த்தைகள் மற்றும் நூல்கள் தொடர்பான கேள்விகள் முதல் 10 வரையிலான தமிழ் பாடப் புத்தகத்திலிருந்தே கேட்கப்படுகின்றன
பொருத்துதல்
·         அக்கம் – தானியம்
·         அங்கண் – அழகிய இடம்
·         ஆமா  – காட்டுப்பசு
·         ஆற்றுணா – கட்டுச்சோறு
·         இருந்தி – பெருஞ்செல்வம்
·         இரும்பை  – பாம்பு
·         ஈட்டம் – கூட்டம்
·         ஈங்கதிர் – சந்திரன்
·         உரன் – திண்ணிய அறிவு
·         உலண்டு – கோற்புழு
·         உகுநீர் – ஒழுகும் நீர்
·         ஊழை – பித்தம்
·         எழினி – இருதிரை
·         எறும்பி – யானை
·         எருத்தம் – பிடரிகழுத்து
·         கவர்தல் – நுகர்தல்
·         ஈன்றல் – தருதல்உண்டாக்குதல்
·         சிறுமை  – துன்பம்
·         மறுமை – மறுபிறவி
·         நன்றி – நன்மை
·         அல்லவை – பாவம்
·         துவ்வாமை – வறுமை
·         அமர்ந்து – விரும்பி
·         அகன் – அகம்உள்ளம்
·         படிறு – வஞ்சம்
·         செம்பொருள் – மெய்ப்பொருள்
·         பீற்றல் குடை – பிய்ந்த குடை
·         கடையர் – தாழ்ந்தவர்
·         விழுச்செல்வம் – சிறந்த செல்வம்
·         நுனி – மிகுதி
·         முழவு – மத்தளம்
·         வனப்பு – அழகு
·         தூறு – புதர்
·         மெய்ப்பொருள் – நிலையான பொருள்
·         வண்மை – கொடைத்தன்மை
·         புரை – குற்றம்
·         குழவி – குழந்தை
·         ஆடுபரி – ஆடுகின்ற குதிரை
·         துன்னலர் – பகைவர்
·         கலைமடந்தை – கலைமகள்
·         நீரவர் – அறிவுடையார்
·         அகம் – உள்ளம்
·         அல்லல் – துன்பம்
·         புனைதல் – புகழ்தல்

Buy GK Kalanjiyam TNPSC Special Series 

புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்

இப்பகுதில் பிரிவு அ வில் உள்ள 4 சொற்களுக்கு ஏற்ற சரியான பொருளை பிரிவு ஆ வில் உள்ள 4சொற்களுக்கும் பொறுத்த வேண்டும். இதிலிருந்து பத்து முதல் பதினைத்து கேள்விகள் கேட்கபடுகிறது, எனவே நீங்கள் இதற்காக நன்கு பயிற்சி எடுத்துகொள்ளவேண்டும்.

இதற்கு நீங்கள் 6th to 10th          புத்தகத்தில் உள்ள ஆசிரியர்களைப் பற்றியும் அவர்கள்எழுதிய நூல்களைப் பற்றியும் நன்கு படிக்கவேண்டும்.சமிபகாலமாக TNPSC Exam இல் இப்பகுதில் இருந்து அதிகமான கேள்விகள் கேட்கபடுகிறது ஆதலால் இதற்கு மிகுந்த முக்கித்துவம் தந்து படித்தல் வெற்றி உங்களுக்குதான்.

பத்துப்பாட்டு நூல்கள்10 பாடல்கள்

 1. திருமுருகாற்றுப்படை-நக்கீரர்
 2. பொருநராற்றுப்படை- முடத்தாமக் கண்ணியார்
 3. சிறுபாணாற்றுப்படை- நல்லூர் நத்தத்தனார்
 4. பெரும்பாணாற்றுப்படை- கடியலூர் உருத்திரங்கண்ணனார்
 5. முல்லைப்பாட்டு- நப்பூதனார்
 6. குறிஞ்சிப்பாட்டு- கபிலர்
 7. பட்டினப்பாலை- உருத்திரங்கண்ணனார்
 8. நெடுநல்வாடை- நக்கீரர்
 9. மலைபடுகடாம்; -பெருங்கௌசிகனார்
 10. மதுரைக்காஞ்சி- மாங்குடி மருதனார்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்   : 18 பாடல்கள்

 1. நாலடியார் – சமணமுனிவர்கள்
 2. நான்மணிக்கடிகை – விளம்பி நாகனார்
 3. இன்னாநாற்பது – கபிலர்
 4. இனியவைநாற்பது  – பூதஞ்சேந்தனார்
 5. திரிகடுகம்- நல்லாதனார்
 6. ஏலாதி- கணிமேதாவியார்
 7. முதுமொழிக்காஞ்சி – கூடலூர்க்கிழார்
 8. திருக்குறள்- திருவள்ளுவர்
 9. ஆசாரக்கோவை- பெருவாயின் முள்ளியார்
 10. பழமொழியின் நானூறு – முன்றுரை அரையனார்
 1. சிறுபஞ்சமூலம் – காரியாசான்
 2. ஐந்திணைஐம்பது – மாறன் பொறையனார்
 3. ஐந்திணைஎழுபது – மூவாதியார்
 4. திணைமொழிஐம்பது – கண்ணன்; சேந்தனார்
 5. திணைமாலைநூற்றைம்பது – கணிமேதாவியார்
 6. கைந்நிலை- புல்லங்காடனார்
 7. கார்நாற்பது- கண்ணங்கூத்தனார்
 8. களவழிநாற்பது – பொய்கையார்

ஐம்பெரும்காப்பியங்கள்:

 1. சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்
 2. மணிமேகலை – சீத்தலைச் சாத்தனார்
 3. சீவகசிந்தாமணியை  – திருத்தக்க தேவர்
 4. குண்டலகேசியை – நாதகுத்தனார்
 5. வளையாபதியை – ஆசிரியர் பெயர் தெரியவில்லை

இலக்கண நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள் 

 1. காக்கைபாடினியம் – காக்கைபாடினியார்
 2. இறையனார்களவியல் – இறையனார்
 3. புறப்பொருள்வெண்பாமாலை – ஐயனாரிதனார்
 4. யாப்பருங்கலம்- அமிதசாகரர்
 5. வீரசோழியம்- புத்தமித்திரர்
 6. நேமிநாதம்- குணவீரபண்டிதர்
 7. நன்னூல்- பவணந்தி முனிவர்
 8. நவநீதப்பாட்டியல் – நவநீதநடனார்
 9. சிரம்பரப்பாட்டியல் – மஞ்சோதியர்
 10. பிரயோகவிவேகம் – சுப்பிரமணிய தீட்சிதர்
 11. மாறன் அகப்பொருள் – திருக்குருகைப்பெருமாள் கவிராயர்
 1. இலக்கணகொத்து – சாமிநாத தேசிகர்
 2. தொன்னூல்விளக்கம் – வீரமாமுனிவர்
 3. பிரபந்ததீபிகை-முத்துவேங்கடசுப்பைய நாவலர்
 4. சுவாமிநாதம்- சுவாமிக் கவிராயர்

புகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்

 1. ஊரும்பேரும் – ரா.பி சேதுப்பிள்ளை
 2. குற்றாலக்குறவஞ்சி  – திரிகூடராசப்பக் கவிராயர்
 3. ஜீவகாருண்யஒழுக்கம் – இராமலிங்க அடிகளார்
 4. எழிலோவியம்- வாணிதாசன்
 5. சீறாப்புராணம்- உமறுப்புலவர்
 6. பாரததேசம்- மகாகவி பாரதியார்
 7. நான்மணிக்கடிகை – விளம்பிநாகனார்
 8. இசையமுது- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
 9. திருத்தொண்டத்தொகை – சுந்தரர்
 10. சாகுந்தலம்- காளிதாசர்
 11. திண்ணையைஇடித்துத் தெருவாக்கு – தாராபாரதி
 12. ஏலாதி- கணிமேதாவியார்
 13. செய்யும்தொழிலே தெய்வம – பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம்
 14. அந்தக்காலம்இந்தக் காலம் – உடுமலை நாராயண கவி
 15. ஓர்இரவு – அறிஞர் அண்ணா

மேலும் பல நூல்கள் உள்ளன. அவற்றை நீங்கள் தேடி அறிந்து தேர்வுக்கு தயாராகுங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *