தபால்த் துறை

இந்திய அஞ்சல் துறை ‘இந்தியா போஸ்ட்’ (India Post) என்ற பெயரில் செயல்படுகிறது. இது இந்திய அரசினால் செயல்படுத்தப்படும் அஞ்சல் சேவை ஆகும். பல வழிகளில் மக்களுக்குச் சேவை செய்து வருகிறது. நாள் ஒன்றுக்கு இரண்டு இலட்சம் கடிதங்கள் பட்டுவடா செய்யப்படுகின்றன. நாட்டின் எந்த இடத்திலிருந்தும் எந்த இடத்திற்கும் அதிகபட்சமாக நான்கு நாட்களுக்குள் கடிதங்கள் பட்டுவடா செய்யப்படுகிறது.

இந்திய அஞ்சல்துறை மொத்தம் 154,000 அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய துறையாகும்(சீனா இரண்டாவது இடம், 57,000 தபால் அலுவகங்கள்). இதன் பரந்து விரிந்த அலுவலகங்களால் இந்தியாவின் அனைத்து இடங்களும் இணைக்கப்படுகின்றன. இந்திய அஞ்சல் துறையில் மொத்தம் 593,878 (2001ம் வருடத்தின் படி) ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இந்திய அஞ்சல் துறை சிறிய வகை வங்கி சேவைகளிலும் ஈடுபடுகிறது. இதன் மூலம் வங்கி வசதி இல்லாத கிராமங்களும் பயன்பெறுகின்றன.21 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு, சுமார் 6000 நபர்களுக்கு ஒரு அஞ்சல்அலுவலகம் என்ற விகிதத்தில் இது உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 10,263 அஞ்சலகங்கங்கள் உள்ளன.

துறை அமைப்பு

இந்திய அஞ்சல் துறை இந்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டது. இந்தியாவில் மொத்தம் 22 அஞ்சல் வட்டங்கள் தற்போது உள்ளன. ஒவ்வொரு அஞ்சல் வட்டமும் தலைமை அஞ்சல் அதிகாரியின் கீழ் இயங்குகின்றன. இந்த அஞ்சல் வட்டங்கள் தவிர இந்திய இராணுவத்தின் அஞ்சல்சேவைக்காக ஒரு சிறப்பு அஞ்சல் வட்டமும் செயல்படுகிறது.

அஞ்சல் துறையில் கிராமின் டாக் சேவகர்கள் மற்றும் இதர பணிக்கு காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள் மற்றும் தேர்வுகள் விவரங்கள் அடிக்கடி நாளிதழ்கள் மூலம் அறிவிக்கப்டுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு பார்த்து, படித்து தெரிந்துகொள்ளவும்.