Corel Draw X6 Tutorials For Basic to Advance

Corel Draw X6 Tutorials

Corel Draw X6 பெரும்பாலும் பிரிண்டிங் துறையில் பயன்படுத்தும் மென்பொருளாக உள்ளது. நீங்கள் ஒரு ஆப்செட் பிரிண்டிங் தொழிலை பழக வேண்டுமெனில் அதற்கு Corel Draw வைத் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. Photoshop எவ்வாறு நாம் பயன்படுத்துகிறோமோ? அதே அளவு கோரல்டிராவினையும் பயன்படுத்துகின்றனர்.

Corel Draw X6

Corel Draw X6 சிறப்பம்சங்கள்

கோரல்டிரா ஒரு Vector வகையிலான பைல்களை உருவாக்கும் மென்பொருள். Photoshop போன்று Pixel களைக் கொண்டு நாம் சரியான Resulation களை  வைக்கத் தேவையில்லை. மாறாக அதுவாகவே சரியான அமைப்பை உருவாக்கிக் கொள்ளும்.

Corel Draw x6 வில் நாம் வெக்டார் மற்றும் பிக்சல் ஆகிய இரண்டுமான பணிகளை மேற்கொள்ள முடியும்.

  • Single Color Job
  • Multi color Job
  • Plate Making
  • Printing Option

என பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது.

Corel Draw x6 வைக் கற்றுக்கொள்வதால் பல்வேறு நிறுவனங்களில் நமக்கு வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. மேலும் Logo உருவாக்கத்தில் இதன் பங்களிப்பு பெருமளவு உள்ளது. Adobe நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள் Illustrator க்கு மாறாக இந்த மென்பொருள் அதிக புழக்கத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Corel Draw X6 Introduction

கிராபிக் துறையில் அனைத்து மென்பொருளிலும் Tools என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதனையடுத்து Menu என்னும் பகுதி விளங்குகிறது. இந்த Tools & Menu ஆகியவை முக்கியமானவை ஆகும்.

ஒவ்வொரு Tool பற்றியும் தனித்தனியாக விளக்கினால் அதனால் நமக்கு எந்த பயனும் விளையப்போவதில்லை. ஒரு வேலையைச் செய்யும் பொழுது எப்படி அந்த Tool மற்றும் Menu வினைப் பயன்படுத்துவது என்பதை விரிவாக பார்ப்போம். கீழ்காணும் Corel Draw X6 Tutorials உங்களுக்கு மிக எளிமையாக Corel Draw X6  பற்றி விளக்கும்.

 

 

Leave a Reply

ta Tamil
X