TNPSC General Tamil

TNPSC General Tamil

சாலினி இளந்திரையன்

சாலினி இளந்திரையன் தமிழ்ப் பேராசிரியர், சொற்பொழிவாளர், எழுத்தாளார், நாடக ஆசிரியர், இதழாளர், அரசியற் செயற்பாட்டாளர், பொதுவுடைமைத் தமிழ்தேசியச் சிந்தனையாளர் என பண்முகம் கொண்ட பண்பாளர். சொல்லுதற்கு ஒரு செய்தி இருந்தால் மட்டும் போதாது; அதைச் சுவைபடச் சொல்லும் திறமையும் பெற்ற சாலை இளந்திரையன் அவர்களின் மனைவி சாலினி இளந்திரையன்.
எளிமைக்கும், தூய்மைக்கும் சொந்தமானவர் சாலினி இளந்திரையன். ஆசிரியப் பணியுடன் இலட்சியப் பாதையை இணைத்து வாழ்ந்தவர்,
தமிழ்ப் பெருந்தகை சாலை இளந்திரையனுக்கு, அக வாழ்விலும், புறவாழ்விலும் துணை நின்றவர். ஏற்ற பொறுப்புகளுக்கெல்லாம் முழு ஈடுபாட்டுடனும் கடமை உணர்வுடனும் செயல் புரிந்து ஏற்றம் தந்தவர். தமிழ் மொழியையும் இனத்தையும் நாட்டையும் இறுதி மூச்சு நிற்கும் வரை நேசித்து தொண்டாற்றியவர் சாலினி இளந்திரையன்.
பிறப்பு
தமிழகத்தின் தென் மாவட்டமான விருதுநகரில் வசித்து வந்த வே.சங்கரலிங்கம் – சிவகாமி தம்பதியருக்கு இரண்டாவது மகளாகவும், மூன்றாவது மகவாகவும் 22.12.1933 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய இயற்பெயர் கனகசவுந்தரி.
இவருடைய தந்தை மும்பையில் வணிக நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றினார். பின்பு 1940 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விருதுநகரில் வீட்டுடன் அமைந்த சொந்த வணிகத்தை நடத்தி வந்தார்.
கனகசவுந்தரியின் அக்காள், ஞானசவுந்தரியும் அவருடைய கணவர் குமாரசாமியும் சென்னையில் சிறந்த மருத்துவர்கள்.
இவருடைய அண்ணன் இராசரத்தினம் இந்திய அரசின் வருமானவரித் துறையில் உயர் அலுவலராகப் பணியாற்றினார்.
அக்காவின் வழிகாட்டலைப் பெற்ற கனக சவுந்தரிக்கு, அவருடைய அண்ணன் இராசரத் தினத்தின் ஊக்குவிப்பும், நம்பிக்கையும் கனகசவுந்தரியின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியது.
அண்ணன் இராசரத்தினமும் அவருடைய மனைவியார், ஜமுனாக்காவும் சாலினியார் மறையும் வரை அன்பு காட்டியவர்கள் ஆவர்.
கல்வி:
மூன்றாம் வகுப்பு வரை மும்பையிலும், ஐந்தாம் வகுப்பு வரை மதுரையிலும், தொடர்ந்து உயர்நிலைப் பள்ளிப் படிப்பை விருதுநகரிலும் முடித்தார். பள்ளிப் படிப்பு மட்டு மன்றி, விருதுநகரில் இருந்த காரைக்கால் அம்மையார் சங்கம், சமரச சன்மார்க்க சங்கம், விருதைத் தமிழ்க் கழகம் ஆகியவற்றிலும் இவருடைய மன வளர்ச்சியில் பங்கு பெற்றன.
மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் இரு ஆண்டு இடைநிலை (இண்டர்மீடியட்) வகுப்பை முடித்த பின்பு, சென்னை மாநிலக் கல்லூரியில் கலை இளநிலை சிறப்பு வகுப்பில் (பி.ஏ. ஆனர்ஸ்) மூன்றாண்டுகள் பயின்றார். அதில் அவர் பெற்ற பட்டம் கலை முதுநிலை (எம்.ஏ) பட்டத்திற்குச் சமம் ஆகும். அப்பொழுது புகழ்பெற்ற தமிழ்ப் பேராசிரியர்களான சரவண ஆறுமுகன், தெ. பொ. மீனாட்சிசுந்தரம், கொண்டல் சு. மகாதேவன், சு. ந.சொக்கலிங்கம் ஆகியோரிடம் பயின்றார். அவர் பயின்ற பாடம் தமிழ்.
திருமணம்:
சென்னை மாநிலக் கல்லூரி, கனக சவுந்தரியின் வாழ்வில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது. அவருக்கு வாழ்வு இணையராக அமைந்த மகாலிங்கம் எனும் சாலை இளந்திரையன் அங்கு அவருடன் பயின்றார். இருவரும் விரும்பியே இல்லறம் ஏற்றனர். ஆயினும், அவர்களுடைய திருமணம், புலவர் இராச கோட்டியப்பரின் துணையுடனும், பெற்றோர் சம்மதத்துடனும் 1954 ஆம் ஆண்டு வே.வ.இராமசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மணமான இருவரும் முதுநிலை இலக்கிய ஆய்வுப்பட்டம் (எம்.லிட்.) பெற ஆய்வுகளை மேற்கொண்டனர்.
சாலினியார், சென்னை பல்கலைக் கழகத்தில் சிலப்பதிகாரச் சொல்வளம் என்னும் தலைப்பில் பேராசிரியர் இரா. பி. சேதுப்பிள்ளையின் வழிகாட்டுதலில்[5] 1954 முதல் 1956 ஆம் ஆண்டு வரை ஆய்வுசெய்து இலக்கிய முதுவர் (விணீstமீக்ஷீ ஷீயீ லிவீtமீக்ஷீணீtuக்ஷீமீ) பட்டம் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து, 1956 ஆம் ஆண்டு முதல் 1958 ஆம் ஆண்டு வரை சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையில், அரசின் உதவி பெற்று, தமிழில் வாழ்க்கை வரலாற்று இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான (ஞிஷீநீtஷீக்ஷீ வீஸீ றிலீவீறீஷீsஷீஜீலீஹ்) ஆய்வை மேற்கொண்டார். ஆனால் 1973ஆம் ஆண்டிலேயே முனைவர் பட்டம் பெற்றார். ஆய்வு ஏடு பின்பு நூலாக வெளிவந்தது.
கல்லூரி ஆசிரியர் பணி:
கனகசவுந்தரி தனது கல்லூரிக் கல்வியை முடித்ததும் திருச்சியில் உள்ள தூய சிலுவை மகளிர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர் பணிக்கு 1954 ஆம் ஆண்டில் விண்ணப்பித்தார். பணியும் கிடைத்தது. ஆனால் அடுத்தமாதமே அவருக்குத் திருமணம் நடைபெற இருந்ததால் முதல் நாளிலேயே அந்த பணியை இழந்தார்.
தம் வாழ்வின் இணையர் சாலையாருடன் 1958 ஆம் ஆண்டு புதுதில்லியில் குடியேறிய சாலினியார், தயாள் சிங் மாலைக் கல்லூரியில் கல்லூரி ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். பின்பு திருப்பதி தேவதானம் புதுதில்லியில் நடத்தும் திருவேங்கடவன் கல்லூரியில், 1961 முதல் அங்கேயே தொடர்ந்து பணியாற்றி பேருரையாளர் (ஸிமீணீபீமீக்ஷீ), பேராசிரியர் (றிக்ஷீஷீயீமீssஷீக்ஷீ) முதல்வர் (றிக்ஷீவீஸீநீவீஜீணீறீ) என உயர்ந்து 1982 ஆம் ஆண்டு நவம்பர் முதல்நாள் விருப்ப ஓய்வுபெற்றார். .
நல்ல குடிமக்களாக, கொள்கை போற்றும் சாதனையாளராக மாணவர்கள் வளர ஆசிரியரின் பங்கு கணிசமானது, எனும் கருத்தைக் கொண்ட சாலினியார், அதற்கேற்ப மிகுந்த உழைப்பை நல்கி மாணவரை வழிநடத்தி நற்பெயர் பெற்றார்.
தில்லியில் தமிழ் மாணவரிடையே இருந்த நம்பிக்கையின்மையையும் தாழ்வு மனப்பான் மையையும் போக்கி, பாடத்தில் ஆர்வத்தை மேம்படுத்தியதுடன் பேச்சுப் போட்டி, கட்டு ரைப் போட்டி, கலை நிகழ்ச்சிகள் முதலிய வற்றிலும் அவர்களை முன்நிற்கச் செய்தார்.
பிற மாணவர்களும் இவரை மதிக்கும் வகையில் வழிகாட்டினார். தமிழர் நாகரிகத்தைக் காட்டும் கண்காட்சியைக் கல்லூரி மாணவர்களைக் கொண்டு நடத்தி பெரும் வெற்றியும் நற்பெயரும் பெற்றார்.
இளைஞர்களை வழி நடத்தும் ஆசிரியர்களுக்கு எப்போதும் நிமிர்ந்து நிற்கும் செம்மாந்த இயல்பும் செயல்நடையில் அதாவது, தங்கள் பணியில் இடையறாத உழைப்பும் மகிழ்ச்சிப் பெருமிதமும் கட்டாயம் இருக்க வேண்டும், எனும் அவர் சொல்லுக்கு அவரே இலக்கணமாகத் திகழ்ந்தார்.
பேச்சும் எழுத்தும்: பள்ளிப் படிப்பில் இருந்து கல்லூரிப் படிப்பு முடியும் வரை, பாடங்களை ஊன்றிப் படிப்பதுடன், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவற்றில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்ற சாலினியார், பிற்காலத்தில் தம் துணைவருடன் இணைந்து தமிழகம் முழுவதும் பயணம் செய்து, இலக்கியங்கள் பற்றியும், இனம், மொழி, மேம்பாடு பற்றியும், வாழ்வில் செம்மையைச் சேர்க்கும் புதிய முற்போக்கு எண்ணங்கள் குறித்தும், கருத்துகளைப் பரப்பினார். 1960-களின் தொடக்கத்திலேயே மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளுக்கு இலக்கியப் பயணம் சென்றார்.
நூல்கள்:
நல்ல செய்திகளையும் எண்ணங்களையும் தாங்கிய, வாழ்க்கை வரலாற்று இலக்கியம் (1974), பண்பாட்டின் சிகரங்கள் (1975), மதிப்பீடு (1979), மனித நேய மணி நெறிகள் (1995), ஆசிரியப் பணியில் நான் (1999), குடும்பத்தில் நான் (2000) ஆகிய எல்லோருக்கும் என்றும் பயன்தரும் நூல்களை எழுதினார். மேலும் தம் துணைவருடன் இணைந்து சில நூல்களை எழுதினார்.
இதழ் ஆசிரியர்:
சாலினி இளந்திரையன் அரசியற் செயற்பாட்டளாராக (றிஷீறீவீtவீநீணீறீ கிநீtவீஸ்வீst) இருந்த பொழுது அவரது கருத்துகளை வெளியிடுவதற்காக 1987 ஆம் ஆண்டில் மனித வீறு என்னும் இதழை வெளியிட்டார். இது இதழ்கள் 12 வெளியீடுகளோடு நின்றுவிட்டது. பின்னர் அறிவியக்கப் பேரவையின் கொள்கையான வீரநடய் அறிவியக்கம் என்னும் இதழுக்கு 1992, 1993 ஆகிய இரண்டு ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார். தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தில் தீவிர ஆர்வமும் செயலில் ஈடுபாடும் காட்டினார். தடை செய்யப்பட்ட, தமிழர் தன்னுரிமைப் பிரகடன மாநாட்டில் கலந்து கொண்டதற்காகச் சில நாள் சிறைப்பட்டார்.
மறைவு:
தம் துணைவர் மறைந்த பின்னரும் மனித நேயப் பார்வையுடன் மக்கள் தொண்டாற்றினார். சென்னைதலைநகர் தமிழ்ச் சங்கமும், தில்லி தமிழ்ச் சங்கமும் இணைந்து தமிழைச் செவ்வியல் மொழியாகவும், மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாகவும் அறிவிக்கக்கோரி 2000 ஏப்ரல் 30 ஆம் நாள் மாநாடு ஒன்றை நடத்தினர். அம்மாநாட்டுக்குத் தலைமை ஏற்கத் தில்லிக்குச் சென்றவர் பேராளர்களை வரவேற்பதற்காகச் சென்றபோது ஏற்பட்ட சாலை விபத்தில் 29.04.2000 ஆம் நாள் மறைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *