TNPSC General Tamil

TNPSC General Tamil

மு.வ

அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு, நண்பர்க்கு என நான்கு கடித இல்லக்கிய நூல்களை எழுதியுள்ளார்
மு.வ.வின் பிற நூல்களுக்கான திறவுகோல் அவர்தம் கடித இலக்கியங்களே என்பர்
தம்பிக்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியுள்ளது
தமிழரின் ஒற்றுமை
தனி ஒருவரின் உயர்வு இன உயர்வு ஆகாது
தமிழ்மொழி ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப்படுத்தும்
ஆட்சி மொழி என்றால் எவ்வகை கல்லூரிகளிலும் எல்லாப் பாடங்களையும் தமிழிலேயே கற்பிக்க வேண்டும்
கடிதம், பணவிடை, விளம்பரப் பலகை, விற்பனைச்சீட்டு முதலியவை எல்லாம் தமிழில் எழுத வேண்டும்
சாதிசமய வேறுபாடுகளை மறக்கக் கற்றுக்கொள்; மறக்க முடியாவிட்டால் புறக்கணிக்கக் கற்றுக்கொள்
வெளிநாட்டுத் துணியை மறுப்பதுபோல் தமிழ்நாட்டுக்கும் தமிழ்மொழிக்கும் நன்மை செய்யாத செய்தித்தாளைகளை விலக்கு
தமிழர் நடத்தும் கடைகளையும் தொழிற்கூடங்களை போற்று
தமிழர் கடை தொலைவில் இருந்தாலும், விலை கூடுதலாக இருந்தாலும், ஏதேனும் குறை இருந்தாலும் அங்கேயே சென்று வாங்கு
கூடிய வரையில் தமிழ்நாட்டில் தமிழ்த் தொழிலாளர்களால் செய்யப்பட்ட பொருள்களையே வாங்கு
தமிழரிடையே பகையையும் பிரிவையும் வளர்க்கும் எந்தச் செயலையும் செய்யாதே, பேசாதே எண்ணாதே
கொள்கைகள், கட்சிகள், இயக்கங்களைவிட நாட்டு மக்களின் நன்மையே பெரிது
தலைமை உன்னைத் தேடி வந்தால் வரட்டும்; நீ அதைத் தேடி அலையாதே
தொண்டுக்கு முந்து; தலைமைக்குப் பிந்து
ஒவ்வொருவரும் ஆணையிடுவதற்கு விரும்புகிறார். அடங்கி ஒழுகுவதற்கு யாரும் இல்லை. அதனால் தான் வீழ்ச்சி நேர்ந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *