TNPSC General Tamil

TNPSC General Tamil

வேர்ச்சொல்லைக் கொடுத்து / வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற்பெயரை உருவாக்கல்

வேர்ச் சொல்

வேர்ச் சொல் என்பது ஒரு சொல்லில் அடிப்படையாக அமைந்துள்ள அதன் பகுதியாகும். ஒரு மொழியில் ஒலியன் அடிப்படையில் தொடர்புள்ளனவும், பொருட் தொடர்புகளைக் கொண்டனவுமான பல சொற்கள் காணப்படுகின்றன. இவை அனைத்துக்கும் பொதுமையாக அமைந்திருப்பனவே வேர்ச் சொற்கள் ஆகும்

எடுத்துக் காட்டாக வளை, வளையம், வளையல், வடை, வட்டம், வட்டு, வட்டில், வடம் போன்ற சொற்கள் அனைத்துக்கும் அடிப்படையாக அமைந்திருப்பது வள் என்பதாகும். எனவே இச் சொற்களின் வேர்ச்சொல் வள் ஆகும். வேர்ச் சொற்களுடன் ஒட்டுக்கள் சேரும்போது பல்வேறு சொற்கள் உருவாகின்றன.

கீழ்க்கண்ட சில உதாரணங்களை பார்க்கவும் :-

சொல் வேர்ச் சொல்
வணங்கினான் வணங்கு
வளர்ந்தான் வளர்
ஒழுகினான் ஒழுகு
படர்ந்து படர்
தளர்ந்தான் தளர்
ஒதுக்கினான் ஒதுக்கு
பதுக்கினான் பத்துக்கு
போனான் போ
வைத்தான் வை
ஆடினான் ஆடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *