Photoshop Introduction in Tamil

போட்டோஷாப் அறிமுகம் (Photoshop Introduction)

நீங்கள் இதுவரை போட்டோஷாப் பற்றி அறிந்திருக்கவில்லை என்றால் கூட எளிதாக கற்றுக் கொள்ள முடியும்.

பொதுவாக போட்டோஷாப் எங்கெங்கு பயன்படுகிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு புகைப்படத்தை எடுப்பதற்கு புகைப்பட நிலையத்திற்கு சென்றிருப்பீர்கள். உங்கள் வணிகத்திற்கு தேவையான விளம்பரத்தை செய்வதற்கு நோட்டீஸ் செய்வதற்கும், சுபநிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழ்கள், நோட்டிஸ்கள் செய்வதற்கு அச்சகத்திற்கு சென்று இருப்பீர்கள். பேனர் உருவாக்கும் டிஜிட்டல் பேனர் கடைகளுக்கு சென்று இருப்பீர்கள். திருமணங்களில் கொடுக்கப்படும் ஆல்பங்களை நீங்கள் கண்டிருக்கக் கூடும். மேலும் வலைத்தளங்களை உருவாக்குவதற்கும் போட்டோஷாப் பயன்படுகிறது.

இவ்வாறு பல்வேறு பரிமாணங்களில் போட்டோஷாப் அவரவர் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தப்படுகிறது. இந்த பதிவில் நீங்கள் போட்டோஷாப் குறித்த ஒரு சிறு விளக்கத்தினை அறிந்துகொள்வீர்கள். Photoshop, Corel Draw, Page Maker, InDesign, Illustrator,  இன்னும் பிற மென்பொருட்கள் DTP (Desktop Publishing) எனப்படும் துறையில் பயன்படுத்தப்படுகிறது. தற்காலச் சூழலில் அதனை கிராபிக் டிசைன் (Graphic Design) என்று அழைக்கின்றனர்.

போட்டோஷாப் 7.0

போட்டோஷாப்பை பொருத்தவரை டூல்ஸ் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அதேபோல் லேயர் பேலட் இதுவும் முக்கியமான ஒன்றாகும். நாம் உருவாக்கும் ஒவ்வொன்றையும் இந்த டூல்ஸ் அண்ட் லேயர்ஸ் ஆகியவற்றை முறையாக பயன்படுத்தி செய்ய முடியும். கீழுள்ள வீடியோவில் இதனை பற்றிய ஒரு சிறு அறிமுகத்தையும் டூல்ஸ் லேயர் கலர் என்று சிலவற்றை பார்க்க இருக்கிறோம்.

Tools

போட்டோஷாப்பில் செய்யப்படும் பல்வேறு வேலைகளும் இந்த Tool Box ன் துணைக்கொண்டே செய்யப்படுகிறது. ஒரு வட்டம், கட்டம் மற்றும் இதர பயன்படுகளுக்கென்று பல்வேறு Tool களை தன்னகத்தே கொண்டுள்ளது. அதிகம் பயன்படுத்தப்படும் Tool கள் எவை என்பதை பின்வரும் பதிவுகளில் காணலாம்.

Layers

நாம் உருவாக்கும் ஒவ்வொரு பகுதியும் Layer என்று கணக்கில் கொள்ளப்படுகிறது. இதில் Text Layer என்று இன்னொரு வகையினையும் காணலாம். எழுத்துக்களைக் கொண்டு உருவாக்கும் பகுதிகளை இந்த வார்த்தையில் குறிப்பிடப்படுகிறது.

Color

வண்ணங்கள் கொண்டு பெரிதாக ஈர்க்கும் கலையை நாம் போட்டோஷாப்பில் காணமுடியும். நீங்கள் காணும் ஒவ்வொன்றிலும் உள்ள வண்ணங்களை எளிதாக போட்டோஷாப்பில் கொண்டுவரமுடியும். எனவே Color பற்றிய தெளிவான புரிதலை நீங்கள் அறிந்துகொள்ள கீழுள்ள வீடியோவினைக் காணலாம்.

Color Separations

மேலும் போட்டோஷாப் குறித்த பல்வேறு பதிவுகள் நமது வலைதளத்தில் உள்ளது. அதேபோன்று வீடியோ வடிவில் நமது YouTube சேனலில் பல்வேறு வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. நீங்கள் அதனை பார்த்து முறையாக போட்டோஷாப்பை கற்றுக்கொள்ளலாம். மேலும் உங்களுக்கு விருப்பம் இருக்கும் பட்சத்தில் நமது Social Media Facebook, Twitter, Instagram, பக்கங்களை பார்வையிடலாம்.

Leave a Reply

ta Tamil
X