Photoshop Tutorials YouTube

Photoshop Tutorials YouTube

Photoshop பற்றிய அறிமுகம் மிக முக்கியமானது. ஏனெனில் எதற்காக இந்த சாப்ட்வேர் பயன்படுத்துகிறோம் என்பதை தெரிந்துகொண்டால், இதனை பயன்படுத்தும்போது எளிதாக இருக்கும்.

போட்டோஷாப் மென்பொருள் பலதுறைகளில் பயன்படுத்தப்படுகிறது. Photo களை அழகுபடுத்த மட்டுமே இது பயன்படுவதில்லை. தவிர்த்து Web Design Layout, Wedding Album, Banner Design, Business Promotion என பல வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

Photoshop Versions

கடந்த பிப்ரவரி 19, 2020 அன்று ADOBE PHOTOSHOP தொடங்கி 30 வருடங்கள் முடிவடைந்துள்ளன. எனவே நமது டுடோரியல்களில் பெரும்பாலும் Photoshop 7.0 என்னும் Version தான் பயன்படுத்துகிறோம். எனினும் பல வகையான அப்டேட்களுடன் Photoshop வெளிவந்துள்ளது. தற்போது 2020 ல் Photoshop CC 2020, Photoshop CS6 என்னும் இரண்டு வகையான மென்பொருள்களை அவர்கள் களத்தில் இறக்கியுள்ளனர்.

Photoshop Tutorials

நமது YouTube சேனலில் Photoshop 7.0 டுடோரியல்கள் அடிப்படையிலிருந்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவு அதன் முதல் வீடியோவிற்கானது. மேலும் பல வீடியோக்களை நமது வலைதளத்திலேயே பதிவிடுகிறேன். நீங்கள் Phtoshop 7.0 என்னும் இந்த வகையில் உள்ள வீடியோக்களை கவனமாக பார்த்து வந்தால் எளிதாக கற்றுக்கொள்ளலாம்.

DTP Software

நீங்கள் பிரிண்டிங் துறையில் காலூன்ற நினைத்தால் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய மென்பொருள்கள் என நான் சிலவற்றை குறிப்பிடுகிறேன்.

மேற்கூறியவற்றில் முதன் மூன்றை மட்டும் நாம் DTP என்னும் துறையில் பெரும்பான்மையாக பயன்படுத்தக்கூடியதாக அறிகிறோம்.

இந்த மென்பொருள்களைப் பற்றிய வீடியோக்கள் பலவற்றை இங்கு நாம் பதிவிட்டுள்ளோம். தொடர்ச்சியாக பயின்று பயிற்சி எடுத்தால் அனைத்து கைவரும்.

மேலும் பிரிண்டிங் துறைசார்ந்த இந்த தொழிற்முறை பயிற்சிக்கு Professional Courses for Graphic Design என்பதை வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம்.

Photoshop Tutorials YouTube Playlist

முறையாக ஒவ்வொரு வீடியோக்களும் நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்துள்ளது. அதனடிப்படையில் இங்கு ஒவ்வொரு வீடியோவிலும் குறிப்பிட்டுள்ள சிலவற்றைக் குறிப்பிட்டுக் காட்டுகிறேன்.

free photoshop tutorials என்னும் வகையில் அமைந்துள்ள இந்த வீடியோக்கள் உங்களுக்கு எளிமையாக போட்டோஷாப் பற்றிய அறிமுகத்தையும் அதையடுத்து படிப்படியாக உபயோகிக்க வேண்டிய வழிமுறைகளையும் கற்றுக்கொடுக்கும். ஒவ்வொரு வீடியோவிலும் முக்கியமான சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லி இருப்பதனால் நீங்கள் முடிந்தவரை முழு வீடியோவையும் SKIP செய்யாமல் பார்ப்பது நலம்.

Photoshop Introduction

இந்த வீடியோவில் போட்டோஷாப் Menu மற்றும் Tools ஆகியவற்றைப் பற்றியும். ஒரு புது Document உருவாக்குவது எப்படி என்பதையும் குறிப்பிட்டுள்ளேன்.

ஒரு Visiting Card உருவாக்கத் தேவையான அளவுகளை நாம் எப்படி வைப்பது. இதில் குறிப்பிட்டுள்ள அளவுகளில் MM, Inches, Pixels என்பது என்னவென்று விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

 Photoshop Tutorials

Layer & Text Layer

போட்டோஷாப்பில் நாம் அறிந்துகொள்ளவேண்டிய இன்னொரு முக்கியமான பகுதி Layer ஆகும். இதனை நாம் என்னவென்று முழுதுமாக அறிந்துகொண்டால் போட்டோஷாப்பினை எளிதில் கற்றுக்கொள்ளலாம்.

Photoshop Tutorials Layer

நாம் உருவாக்கும் Rectangle, Circle ஆகியவற்றை நாம் Layer என்று குறிப்பிடுகிறோம். அடுக்கிவைக்கப்பட்ட ஒவ்வொரு Object ம் லேயர் என்றே கருதுகிறோம். அதில் குறிப்பாக Text Layer என்பதை அறிந்துகொள்ள சற்று கடினமாக இருந்தாலும் அடுத்தடுத்த வீடியோக்கள் உதவும்.

Photoshop Text Tool

Photoshop ல் நாம் பல்வேறு எழுத்துகளை உள்ளிட்டு அதற்கு தகுந்த வண்ணங்களைக் கொடுக்க முடியும். நாம் உள்ளிடும் அனைத்து எழுத்துக்களும் பல்வேறு வகைகளில் வகைப்படுத்தி உள்ளிட முடியும். Text Layer களாக உருவாகும் அவற்றைப் பற்றிய சிறு புரிதலில் நாம் அடுத்த படியை எடுத்து வைக்க முடியும். கீழுள்ள வீடியோ உங்களுக்கு Text Layer என்பதைப் பற்றிய விளக்கத்தினைக் கொடுக்கும்

Photoshop Magic Want Tool

ஒரு குறிப்பிட்ட வண்ணம் மற்றும் சில தேவையற்ற பகுதிகளை நீக்க அவற்றை நாம் செலக்ட் செய்ய இந்த Magic Want Tool அருமையாக உதவுகிறது. இதற்கான Shortcut என்பது W ஆகும். நீங்கள் கீபோர்ட்டில் W பட்டனை அழுத்தினால் உங்களுக்கு பயன்படுத்த தயாராகவிடும்.

Photoshop magic want tool

மேலே படத்தில் காட்டியுள்ளபடி இருக்கும் Tool Box ல் Magic Want Tool தெரியும். நீங்கள் எவ்வாறு இதனைப் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றிய வீடியோ கீழே உள்ளது.

Lasso Tool, Hue And Saturation, Gradient Tool

Photoshop பற்றி நன்கு அறிந்துகொள்வதற்கு Tool களில் உள்ள சிலவற்றை நாம் முறையாக அறிந்துகொள்ள வேண்டும். அவற்றில் சிலவற்றைப் பற்றி பார்ப்போம்.

Lasso Tool

இந்த Tool நமக்கு எளிதாக சில Object களை தெரிவு செய்ய பயன்படுகிறது.

Photoshop Lasso Tool

படத்தில் காட்டியுள்ளபடி 3 தனித் தனி Tool கள் உள்ளன. ஒவ்வொன்றும் அதன் தன்மைக்கேற்ப தனது பணியினைச் செய்கிறது.

Hue And Saturation

Photoshop மற்றும் இதர மென்பொருள்களில் இது பயன்படுகிறது. ஒரு வண்ணத்தை அதனையொட்டியுள்ள பல்வேறு நிறங்களுக்கு மாறுபடுவதற்கு பயன்படுகிறது.

எடுத்துக்காட்டாக நாம் நீலம் நிறத்தைப் பயன்படுத்தினால் அதனையொட்டி இருக்கின்ற சில வண்ணங்களை நாம் உடனடியாக இந்த Hue and saturation பயன்படுத்தி மாற்றிக்கொள்ள முடியும். இதற்கு Ctrl + U என்னும் பொத்தானைப் பயன்படுத்தலாம்.

Gradient Tool

இரண்டு வண்ணங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வண்ணங்களை உருவாக்க இந்த Tool பயன்படுகிறது.

Photoshop Gradient Tool

படத்தில் காட்டியுள்ளபடி இரண்டு வண்ணங்கள் ஒன்றறக் கலந்தது போல இருக்கும் தோற்றத்திற்கு Gradient என்கிறோம். இதனை கீபோர்டில் Shortcut பயன்படுத்த G என்னும் எழுத்தினைப் பயன்படுத்தலாம்.

மேலும் இந்த Tool பற்றிய விரிவான விளக்கத்தினை கீழுள்ள வீடியோவில் காணலாம்.

Pen Tool, Lasso Tool

Pen Tool மற்றும் Lasso Tool ஆகியவை ஒரு பகுதியை தேர்வு செய்வதற்காக பயன்படுகிறது. இவற்றைக் கொண்டு நமக்குத் தேவையான பகுதிகளை தேர்வு செய்து அதனை தனியாக பிரித்து பயன்படுத்த முடியும்.

Photoshop Tutorials

மேலும் Photoshop Tutorial கள் தொடர்ச்சியாக அடுத்தடுத்த பதிவுகளில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கு PSD பைல்கள் தேவையெனில் நீங்கள் deepam digital வலைதளத்தில் தரவிரக்கம் செய்து கொள்ளலாம்.

PSD Categories

  • Banner Design
  • Invitation Design
  • Logo Design
  • Birthday Design
  • Title Design
  • Font Effects

என பலவகைகளில் PSD Files தரவிரக்கம் செய்ய கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் போட்டோஷாப் பற்றிய முன்னதாக பதிவுகளை நீங்கள் கீழே உள்ளவற்றில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

Photoshop Tutorials List

Photoshop Tutorials YouTube

Photoshop Tools Shortcuts Tutorial

Importance of Layers in Photoshop

Photoshop Size Measurement Features

Types of Layer masking techniques in Photoshop

Align and distribute in Photoshop

Photoshop Actions - How to create

Wedding Invitation Typography in Photoshop

How to Create a Birthday Design in Photoshop

How to create a business brochure

மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த பதிவுகள் போட்டோஷாப் பற்றிய அடிப்படைகளை உங்களுக்குக் கொடுக்கும்

இதே போல் Photoshop, Corel Draw, InDesign CS6, Page Maker 7.0, Premiere Pro CC, Illustrator CC, WordPress  பற்றிய விரிவான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. PSD, CDR, Vector, Fonts, Clip ஆகியவை Free download செய்து கொள்ளலாம்.

முறையாக நீங்கள் Printing துறையில் சாதிக்க அல்லது இந்த மென்பொருள்கள் பற்றி Tutorial கள் பார்க்கலாம். உங்ளது திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ளலாம். மேலதிக தகவல்களுக்கு YouTube நமது சேனலைப் பார்வையிடலாம்.

Leave a Reply