FAQ on Photoshop

Faq on Photoshop : நீங்கள் நமது YouTube ல் பல்வேறு வீடியோக்களை பார்த்திருப்பீர்கள். எனினும் சில சந்தேகங்கள் இருந்திருக்கும்.

அதனை  அவ்வப்போது நீங்கள் கமெண்ட்டில் பதிவிட்டிருக்கக் கூடும். அவ்வாறு பலரது சந்தேகங்களுக்கு சேர்த்தார் போல் இந்த பதிவு இருக்கும்.

Why Photoshop 7.0

நாளுக்கு நாள் தொடர்ந்து Adobe Photoshop நிறுவனத்தால் அப்டேட்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. எனினும் பழைய மென்பொருளான Photoshop 7.0 வை நீங்கள் தொடர்ந்து கற்பித்து வருகிறீர்கள்.

சரியான கேள்விதான். எனினும் போட்டோஷாப் நிறுவனத்தால் வழங்கப்படும் மென்பொருள்கள் காலத்திற்கேற்ப மெருக்கேற்றிக் கொண்டு வருகின்றனர்.

ஆனால் நடுத்தர அல்லது தற்போதுதான் தொழில் துவங்கும் அல்லது ஏற்கனவே இங்கு சிறு மற்றும் குறு தொழில் தொடங்கியுள்ளவர்களால் அத்தகை மென்பொருளை விலைகொடுத்து வாங்க முடியாது.

மேலும் அந்த மென்பொருள்களில் Photoshop CS, Photoshop CC வகைகளில் பெரும்பாலான தமிழ் எழுத்துருக்கள் (Tamil Fonts) சரியான வேலை செய்வதில்லை.

எனவே பயன்படுத்துவதற்கு எளிதாகவும் அதே போல் எந்தவொரு பிரச்சினையும் இன்றி இலகுவாக வேலை செய்ய போட்டோஷாப் 7.0 போதுமானதாக இருக்கிறது.

Full Photoshop Tutorials Playlist

நீங்கள் தொடர்ச்சியாக கீழுள்ள Photoshop Playlist யைப் பார்த்தால் போட்டோஷாப் எளிதாக தெரிந்துகொள்ளலாம்.

மொத்தமுள்ள 42 வீடியோக்களில் நீங்கள் குறைந்தபட்சம் 20 வீடியோக்களைப் பார்த்தால் மட்டுமே பல்வேறு சந்தேகங்கள் நீங்கும்.

How to Use Pen Tool in Photoshop

பெரும்பாலான வேலைகளைச் செய்ய Pen Tool பயன்படுகிறது. இதில் உள்ள சிக்கல்களை பல வீடியோக்களில் எடுத்துரைத்துள்ளோம். குறிப்பாக கீழுள்ள இந்த வீடியோக்களில் அந்த சந்தேகங்கள் தீரலாம்.

Pen Tool uses and Important Image cutting in Adobe Photoshop

Adobe Photoshop Pen Tool Shape Path Using tips

மேலுள்ள வீடியோக்கள் போட்டோஷாப்பில் உள்ள Pen Tool பற்றிய சந்தேகங்களைத் தீர்த்திருக்கும்.

What is Layer and Layer Mask in photoshop

Layer மற்றும் Layer Mask குறித்த விவரங்களை நீங்கள் கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்.

What is difference layer and shape layer in Photoshop

How to Install Tamil Fonts and Uses

தமிழ் எழுத்துருக்களை எவ்வாறு Photoshop ல் பயன்படுத்துவது மற்றும் நிறுவுவது என பலர் கேட்டுள்ளனர்.

கீழுள்ள 9 வீடியோக்களில் அதனைப் பற்றி தெளிவாக விளக்கியுள்ளோம். இதில் உள்ள மென்பொருளை தரவிரக்கம் செய்ய Tamil fonts பகுதியை நீங்கள் பார்வையிடலாம்.

Photoshop 7.0 Digital Painting

Digital Painting குறித்து பல்வேறு வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது. பொதுவாக தொடர் முயற்சி மட்டுமே பெயிண்டிங் சிறப்பாக வருவதற்கு ஏதுவாக இருக்கும். சில டிப்ஸ்கள் மட்டுமே அடங்கிய வீடியோக்களை கீழுள்ள பிளேலிஸ்டில் பார்க்கலாம்.

FAQ on Photoshop gradient Tricks

போட்டோப்பில் எவ்வாறு இரண்டு மூன்று வண்ணங்களைப் பயன்படுத்தி கட்சி பெயர்கள் மற்றும் பிறவற்றில் பயன்படுத்துவது என்பதைப் பற்றிய விரிவான தகவல் கீழே உள்ள வீடியோவில் உள்ளது.

மேலும் பல்வேறு சந்தேகங்களில் உள்ள கமெண்டுகளை தேடி அவ்வப்போது இந்த பகுதியினை தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறோம். எனவே தொடர்ந்து படித்து உங்கள் சந்தேகங்களை நீக்கிக் கொள்ளுங்கள்.